மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி… அண்ணாமலை அதிரடி பேட்டி

209 0

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளின் நிர்வாகிகளும் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக தகவல் பரவியது. இதனிடையே நெட்வொர்க் 18 நடத்திய ரைசிங் இந்தியா நிகழ்வில் பேசிய உள் துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக கூட்டணியில் பாஜக நீடிப்பதாக தெரிவித்திருந்தார். இதனால் கூட்டணி தொடர்பான விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளருக்கு பிரத்யேக பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “2024 மக்களவைத் தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை அது பேசி முடிவு செய்ய வேண்டிய விஷயம். தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் பிராந்திய கட்சிகள். 2024 இல் நடைபெறவுள்ளது அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் தேர்தல். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மட்டுமே அதிமுக தலைமை வகித்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமை பாஜகதான். ஆக, மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி” என்று தெரிவித்தார்.

Related Post

ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் மகா சிவராத்திரி உற்சவம் கோலாகலம்: பக்தர்களுக்கு மகா லகு தரிசனம்

Posted by - February 17, 2023 0
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி உற்சவம் நாளை (சனிக்கிழமை) கோலாகலமாக நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு,…

நட்பாக பழகிய நர்சிங் மாணவிக்கு மது கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நண்பர்கள்

Posted by - February 21, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவருக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. வாலிபரின் நண்பரும், மாணவியுடன் நெருங்கி…

மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நிதியமைச்சர் ரூ.10 லட்சம்வரை கடனுதவி அறிவிப்பு!

Posted by - August 17, 2024 0
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை…

பூரண மதுவிலக்கு – முதலமைச்சர் அதிரடி…

Posted by - March 13, 2025 0
சட்டசபையில் 2025-26-ம் நிதியாண்டிற்கு ரூ.13 ஆயிரத்து 600 கோடிக்கான பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பெண்கள், மாணவர்களுக்காக பல்வேறு…

கனமழையால் யமுனை ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டிய நீர்மட்டம்: கரையோர மக்கள் வெளியேற்றம்

Posted by - July 11, 2023 0
தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில பேய்மழை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *