“அண்ணாமலையை சும்மா விடுவோமா…? – உதயநிதி ஸ்டாலின்

240 0

அண்ணாமலை மீது தானும் மான நஷ்ட வழக்கு தொடரவுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.

DMK Files என்ற பெயரில் திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்து பட்டியலை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14-ம் தேதி வெளியிட்டார். இதனை திட்ட்வட்டமாக மறுத்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கட்சியின் மீது ஆதாரமற்ற வகையில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன், ரூ. 500 கோடி இழப்பீடு கேட்டு சட்ட அறிக்கையை அண்ணாமலைக்கு அனுப்பினார்.

 

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில்  1000 இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் பண்டிகையொட்டி, நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், திமுகவினர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுப்பிய அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர்,  “என்னிடம் மட்டும் நிறைய கேள்விகள் கேட்கிறீர்கள். ஆனால் அண்ணாமலையிடம் ஸ்கூல் டீச்சர் மாதிரி பேசுவதை மட்டும் கேட்டு வருகிறீர்கள். அண்ணாமலை மீது நானும் மான நஷ்ட வழக்கு தொடரலாம் என்று உள்ளேன். திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அதெப்படி சும்மா விடுவோம்” என்று கேள்வி எழுப்பினார்.

Related Post

மெட்ரோவுக்கு மத்திய அரசு கொடுத்த ரூ.21,000 கோடியில் ரூ.15,120 கோடி என்ன ஆனது?- ஹெச்.ராஜா

Posted by - September 14, 2024 0
மெட்ரோவுக்கு மத்திய அரசு கொடுத்த ரூ.21,000 கோடியில் ரூ.15,120 கோடி என்ன ஆனது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார் .கடந்த ஆண்டு டிசம்பரில்…

ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?

Posted by - January 17, 2026 0
சட்டமன்ற தேர்தலுக்கான சில முக்கியமான வாக்குறுதிகளை இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட நிலையில், அதனை கடுமையாக விமர்சித்துள்ளார் சீமான். அப்படி என்ன சொன்னார்.?…

“எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல” நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!

Posted by - March 3, 2025 0
கச்சத்தீவு விவகாரம், தமிழ்நாடு மீன்பிடி சட்டத்திருத்தம் என திமுக-விற்கு எதிரான கருத்துக்களை நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் பேசியுள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்து…

விஜய்க்காக களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா! ஜான் ஆரோக்கியசாமிக்கு அல்வா! ஜனநாயகனின் புது ஸ்கெட்ச்

Posted by - January 30, 2025 0
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமிக்கு பதிலாக ஆதவ் அர்ஜுனா பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர்…

விஜய் மக்கள் சந்திப்பு: காஞ்சிபுரத்தில் நாளை நடைபெறும் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அனுமதி மறுப்பு! பரபரப்பு அறிக்கை வெளியீடு!

Posted by - November 22, 2025 0
“காஞ்சிபுரம் அருகே நாளை விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது நாளை நடைபெறும் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *