வெயில் அதிகமா இருக்கா..? வருகிறது மழை..

260 0

தமிழ்நாடு, புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கி விட்ட நிலையில், பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், பகல் 11 மணி முதல் 3 வரை தேவையின்றி மக்கள் வெளியே வரவேண்டாம் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில், 19 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

 

இதன் காரணமாக, 20 ஆம் தேதி முதல் 2 நாட்கள் தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம், 2 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கணித்துள்ளது. வட மற்றும் மத்திய தமிழக பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆர்வலர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

இதனால், வெளியே செல்வதை தவிர்ப்பது, நீர் சத்து மிக்க உணவுகளை உண்பது என்பன உள்ளிட்ட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.

Related Post

அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு: தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது

Posted by - January 13, 2026 0
அமைச்​சர் நடத்திய பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​பாடு ஏற்பட்டதால் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்​தது. சென்னை மாநக​ராட்​சி​யில், ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில் தூய்​மைப் பணியை தனி​யார்​மய​மாக்​கியதற்கு எதிர்ப்பு தெரி​வித்​து,…

புத்தாண்டில் தொண்டர்களை சந்திக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

Posted by - December 28, 2022 0
விஜயகாந்தை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கலாம் தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு.. ஆங்கில புத்தாண்டு அன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த தொண்டர்களை சந்திக்கவுள்ளதாக அந்த கட்சி தலைமை…

சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? இந்த 6 பழமும் நீரிழிவு நோயாளி சாப்பிடலாம்.. என்ன பாருங்க

Posted by - December 2, 2023 0
சென்னை: சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கள், பழங்கள், பருப்புகள் என்னென்ன தெரியுமா? எந்தெந்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும்? ஆரஞ்சு பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?…

இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?

Posted by - March 27, 2025 0
இடைநிலை ஆசிரியர் பணியில் கூடுதலாக சேர்க்கப்பட்ட ஆயிரம் பணி இடங்களுக்கான இட ஒதுக்கீட்டு விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் எந்தெந்த சமூகத்தினருக்கு…

1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!

Posted by - December 26, 2024 0
சட்டமன்ற தேர்தல் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. அரசு வாக்குகளை அள்ள புது வியூகத்தை கையில் எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் 2026ம் ஆண்டு நடக்க…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *