ஊதுவத்தி கம்பெனியில் ரூ.10 கோடி பொருட்கள் நாசம்- வானில் இருந்து விழுந்த எரி கற்களால் தீ விபத்து

105 0

வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம் ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வாசு. இவர், தெக்குப்பட்டு பகுதியில் ஊதுவத்தி தொழிற்சாலை பெரிய அளவில் நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வெடிக்கும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது.Fire Isolated Over Black Background Stock Photo - Download Image Now - Fire  - Natural Phenomenon, Flame, Black Background - iStock

தகவலின்பேரில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதில் தொழிற்சாலையில் இருந்து ரூ.10 கோடி பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து அம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், தீ விபத்தில் உருக்குலைந்த ஊதுவத்தி கம்பெனியில் வேலூர் நடமாடும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் ஜேம்ஸ் அந்தோணிராஜ், ஓய்வுபெற்ற தடய அறிவியல் உதவி இயக்குநர் பாரி உள்ளிட்டோர் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். அதில், வானில் இருந்து நெருப்பு பிழம்பாக வந்த எரிகற்கள் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதை உறுதி செய்தனர். மேலும், அந்த கம்பெனியில் இருந்து எரிகற்கள் சிலவற்றையும் மீட்டனர்.

இவற்றை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தடய அறிவியல் நிபுணர்கள் கூறும்போது, ”வானில் இருந்து எரி கல் தீப்பிழம்பாக எரிந்து வந்து விழுந்தை சுற்று வட்டார பகுதியில் இருந்த சிலர் பார்த்துள்ளனர்.

அவர்களின் நேரடி சாட்சியங்களையும் பதிவு செய்துள்ளோம். சுமார் 3 கி.மீ சுற்றுவட்டாரத்தில் எரிகற்கள் விழுந்த தாக்கம் தெரிந்துள்ளது. மேலும், விபத்து ஏற்பட்ட தொழிற்ச்சாலையில் இருந்து 10-க்கும் மேற்பட்ட எரி கற்களை மீட்டுள்ளோம். முதற்கட்ட ஆய்வில் அவை எரி கல் என்று உறுதியானாலும், அவற்றை முறையாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.

இதற்காக, சேகரிக்கப்பட்ட எரிகற்களை சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பவுள்ளோம். நாட்றம்பள்ளி அருகே ஏற்கெனவே இரண்டு முறை எரிகற்கள் விழுந்துள்ளன. தனியார் கல்லூரியில் விழுந்த எரிகற்களால் பயங்கர சேதம் ஏற்பட்டது. கல்லூரி வாகனங்கள், கண்ணாடிகள் நொறுங்கின. ஊழியர்கள் சிலர் படுகாயம் அடைந்தனர். அதே பகுதியில் விவசாய நிலத்தில் பயங்கர சத்தத்துடன் எரி கல் விழுந்துள்ளது. தற்போது 3-வது முறையாக எரி கற்கள் விழுந்துள்ளது என்றனர்.

Related Post

திமுக- பாஜக கூட்டணியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்…

Posted by - May 29, 2023 0
அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக முதலமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பாஜக-வுடன் திமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக…

8 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை அபேஸ் செய்த கல்யாண ராணி- திடுக்கிடும் தகவல்கள்

Posted by - July 11, 2023 0
ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்செட்டிபட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 30). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மூர்த்திக்கு இன்ஸ்டாகிராமில் ரசிதா என்ற பெண்ணின்…

கொடூரம்! சென்னை ஐஐடியில் பட்டியலின மாணவியிடம் பாலியல் அத்துமீறல்.. 8 பேர் மீது வழக்குப்பதிவு

Posted by - March 27, 2022 0
கொடூரம்! சென்னை ஐஐடியில் பட்டியலின மாணவியிடம் பாலியல் அத்துமீறல்.. 8 பேர் மீது வழக்குப்பதிவு ✍️சென்னை: சென்னை ஐஐடியில் மேற்கு வங்க பட்டியலின மாணவி பாலியல் சீண்டலுக்கு…

மக்களே எச்சரிக்கை..! அதிகரிக்கும் மர்ம காய்ச்சல்… இது கொரோனா வேரியன்டா?…

Posted by - March 6, 2023 0
H3N2 influenza Virus | வேகமாகப் பரவி வரும் H3N2 இன்ஃப்ளூயன்ஸாவிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள, கூட்டத்தைத் தவிர்ப்பது மற்றும் கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற சில…

தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி!

Posted by - July 13, 2024 0
 திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 712 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *