ப்ளே ஆஃப் சுற்றை உறுதிசெய்யுமா சென்னை?

238 0

சென்னை அணியைப் போன்றே, 15 புள்ளிகளைப் பெற்றுள்ள லக்னோ அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று பிளேஆப் சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்தும் முனைப்பில் உள்ளது.

ஐபிஎல் ப்ளே-ஆப் சுற்றுக்கான போட்டி சூடுபிடித்துள்ள நிலையில், இன்று டெல்லி அணியுடன் சென்னை அணி பலப்பரீட்சை நடத்துகிறது.

13 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. மும்பை, பெங்களூரு, லக்னோ உள்ளிட்ட அணிகளும் பிளே-ஆப் வாய்ப்பில் நீடிப்பதால் சென்னை அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறவேண்டியது கட்டாயத்தில் உள்ளது.

வெற்றிபெறும் பட்சத்தில், 2-வது இடத்தை உறுதிசெய்யவும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஒருவேளை தோல்வி அடைந்தால், மற்ற போட்டிகளின் முடிவுகளைப் பொறுத்தே சென்னை அணியின் தலைவிதி தீர்மானிக்கப்படும்.டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இதேபோன்று, இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் மற்றொரு போட்டியில் லக்னோ அணி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.

சென்னை அணியைப் போன்றே, 15 புள்ளிகளைப் பெற்றுள்ள லக்னோ அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று பிளேஆப் சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்தும் முனைப்பில் உள்ளது. சென்னை, லக்னோ அணிகள் ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்பதை இன்றைய நாள் தீர்மானிக்கும் என்பதால், இந்த இரு போட்டிகளும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Related Post

ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டி- துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றது இந்தியா

Posted by - July 19, 2023 0
தென் கொரியா, சாங்வோன் நகரில் ஐ.எஸ்.எஸ்எப்.பின் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள்…

முடிவுக்கு வந்த இந்தியாவின் ராஜாங்கம்..

Posted by - February 23, 2026 0
ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தென்னாப்ரிக்கா அணியிடம் தோற்றதும் மூலம், 12 போட்டிகளாக தொடர்ந்த இந்தியாவின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு டி20…

IPL Auction 2025: அஷ்வின், நூர் அகமதை வாங்கியது ஏன்? – சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்

Posted by - November 25, 2024 0
நூர் அகமது, ரவிசந்திரன் அஷ்வின், டெவான் கான்வே, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் ஷங்கர் உள்ளிட்ட 7 வீரர்களை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது.…

எனக்கு பயந்து வருது, கண்ணீரோடு எதிர்நீச்சல் சீரியல் நந்தினி வெளியிட்ட வீடியோ- ரசிகர்கள் சோகமான கமெண்ட்

Posted by - June 8, 2024 0
எதிர்நீச்சல் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியலுமே மக்களின் ஆதரவை பெறுவதில்லை. ஆனால் ஒரு சில தொடர்கள் முடிவுக்கு வந்தால் மக்களும் சரி, அதில் நடித்த நடிகர்களும் சரி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *