பேஸ்புக் மூலம் தொடர்பு: குழந்தைகளை தவிக்கவிட்டு காதலனை பார்க்க பாகிஸ்தான் சென்ற இந்திய பெண்

143 0

திருமணம் முடிந்த இந்திய பெண்ணுக்கு, பாகிஸ்தான் நபருடன் நட்பு ஏற்பட்டு அவரை பார்ப்பதற்கான பாகிஸ்தான் சென்றுள்ள சம்பவம் நடைபெற்றது.

உத்தர பிரதேசம் கைலோர் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சு (வயது 34). இவர் தற்போது ராஜஸ்தானில் உள்ள அல்வார் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவரது கணவர் அரவிந்த். தற்போது அஞ்சு பாகிஸ்தானில் இருப்பது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணம் கைபர் பக்துன்வாவில் உள்ள, அவரது நண்பரை பார்க்க சென்றுள்ளார். அப்பர் திர் மாவட்ட போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது, பேஸ்புக் மூலமாக நஸ்ருல்லா (வயது 29) என்பவருடன் நட்பு ஏற்பட்டதாகவும், பின்னர் அவர் மீது காதல் கொண்டதால், அவரை பார்க்க பாகிஸ்தான் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.உஷார்: பேஸ்புக் காதல்: நேரில் வர சொன்ன 20வயது பெண்., இளைஞருக்கு நேர்ந்த  அதிர்ச்சி சம்பவம்! | Facebook Love: Girl Arrested For Cheating Young On  SocialMedia! - Tamil Gizbot

பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அனைத்தும் சரியாக உள்ளதால், அவரை போலீசார் விடுவித்துள்ளனர். தற்போது அஞ்சு பாகிஸ்தானில் உள்ளார். இந்த செய்தி வெளிவர ராஜஸ்தான் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவரது கணவர் அரவிந்து கூறுகையில் ”அஞ்சு கடந்த வியாழக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அவரிடம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் உள்ளது.

தனது நண்பரை பார்க்க செல்வதாக சென்றார். இரண்டு நாட்களுக்கு முன் அவரிடம் வாட்ஸ்அப் மூலம் பேசினேன். அப்போது அவர் லாகூரில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புகார் ஏதும் செய்யவில்லை” என்றார். அஞ்சுவிற்கு 15 வயதில் பெண் குழந்தையும், 6 வயதில் மகனும் உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன் பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா குலாம் ஹைதர் என்ற திருமணம் முடிந்த பெண், பப்ஜி விளையாட்டு மூலம் இந்திய நபர் மீது காதல் ஏற்பட்டு இந்தியாவுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் இந்திய குடியுரிமை பெற முயற்சி செய்து வருகிறார்.

Related Post

ரூ.500 கோடி சொத்து மதிப்பு கொண்ட அல்லு அர்ஜுன் திடீர் கைது.. என்ன நடந்தது..?!

Posted by - December 13, 2024 0
ஹைதராபாத்தில் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்பட வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஒரு பெண் இறந்தது தொடர்பாக,…

பணக்கார பிச்சைக்காரர்…மாத வருமானம் ரூ 75000…நிகர சொத்து மதிப்பு மட்டும் 7.5 கோடியாம்…!

Posted by - December 10, 2024 0
Bharat Jain The Indian Richest Beggar – பாரத் ஜெயின், மும்பையில்  வசிப்பவர்களுக்கு இவரை நிச்சயம் தெரிய வாய்ப்பு இருக்கிறது, மக்கள் அதிகமாக கூடும் சத்ரபதி…

முதலீட்டாளர்களுக்கு இலவசப் பங்குகளை வழங்கும் ரயில்வே நிறுவனம்….. ஜூலை 31ம் தேதி இறுதி முடிவெடுக்கும் RITES

Posted by - July 30, 2024 0
முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்கு மட்டும் இல்லாமல் 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவு, இடைக்கால டிவிடெண்ட் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளது.…

ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் – காரணம் என்ன?

Posted by - March 11, 2025 0
அமெரிக்க அதிபர் ட்டம்பின் முடிவுகளால் இந்திய பங்குச்சந்தையும் இன்று கடும் சரிவை சந்தித்துள்ளன. இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்திருப்பதற்கான காரணம் என்ன? என்பது குறித்து கீழே…

கேரளாவில் புதிதாக 300 பேருக்கு கொரோனா பாதிப்பு- 3 பேர் உயிரிழப்பு

Posted by - December 21, 2023 0
நாட்டிலேயே அதிக அளவிளாக கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *