நைஜர் நாட்டில் இருந்து இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள் – மத்திய அரசு வேண்டுகோள்

230 0

புதுடெல்லி:

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அதிபர் முகமது பாசும் கைது செய்யப்பட்டார். இதற்கு ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே, உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளுக்கு நைஜர் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், நைஜரில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறும்படி மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்ச செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நைஜர் நாட்டின் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. நைஜர் நாட்டில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். நைஜர் நாட்டில் இந்தியர்கள் 250க்கும் மேற்பட்டோர் உள்ளனர் என தெரிவித்தார்.

 

Related Post

லேண்டர் தரையிறங்கிய 6 மணி நேரத்திற்கு பின் நிலவின் தரையை தொட்டது ரோவர்

Posted by - August 24, 2023 0
புதுடெல்லி: நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்தது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர்…

எலிகள் மூலம் பரவும் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா- சி.எம்.சி. தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வு

Posted by - April 27, 2023 0
கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எவ்வாறு பரவியது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2021-ம்…

அதிர வைக்கும் வாட்ஸ்அப் விபச்சாரம்..! 14,000 அப்பாவி பெண்கள் பாதிக்கப்பட்ட கொடூரம்..!

Posted by - December 9, 2022 0
வேலை தேடி வரும் அப்பாவி பெண்களை ஏமாற்றி புகைப்படம் எடுத்து அந்த படத்தை வாட்ஸ்அப் குழுக்களில் பதிவிட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். ஐதராபாத்தில் வாட்ஸ்அப் மூலமாக விபச்சாரம் நடத்திய…

இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

Posted by - December 20, 2023 0
மும்பை பங்குச்சந்தை கடந்த சில தினங்களாக உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியதும் சிறிது நேரத்தில் மளமளவென உயர்ந்து 71,913.07 புள்ளியில்…

அரியானாவில் குடும்பத்தினர் கண்முன்னே மூன்று பெண்களை கற்பழித்த கும்பல்

Posted by - September 22, 2023 0
அரியானா மாநிலம் பானிபட்டில், திடீரென நான்கு பேர் கொண்ட கும்பல் ஆயுதங்கள், கத்திகள், வெட்டக்கூடிய கூர்மையான பெருட்கள் ஆகியவற்றுடன் ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளது. வீட்டிற்குள் நுழைந்த அந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *