பெங்களூரு பெண் ஐ.டி. ஊழியரிடம் ரூ.97ஆயிரம் மோசடி: மும்பை கும்பல் துணிகரம்

321 0

பெங்களூரு:

பெங்களூரு மன்யாதாடெக் பார்க் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:- கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி நள்ளிரவில் எனக்கு தானியங்கி தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பதிவு செய்யப்பட்ட குரலில் உங்கள் மீது போக்குவரத்து விதிமீறல் வழக்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆர்.டி.ஓ. மற்றும் அதிகாரிகளுடன் பேச எண் 1ஐ அழுத்தவும் என தெரிவிக்கப்பட்டது.இணையதளம் மூலம் மிரட்டி கோடி கணக்கில் பணம் பறிக்கும் மோசடி கும்பல்-  எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல் | Tamil News Police advises to  be cautious of ...

இதையடுத்து நான் 1ஐ அழுத்தியபோது மறுமுனையில் மும்பை அந்தேரியில் உள்ள வட்டார போக்குவரத்து அதிகாரி என்று கூறிய ஒருவர், என்னிடம் உங்கள் வாகனத்துக்கு எதிராக வழக்கு இருப்பதாகவும், எனவே மும்பையில் உள்ள நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மேலும் அந்த நபர் போலீசாரிடம் அழைப்பை மாற்றுவதாக கூறினார். அதைத்தொடர்ந்து தான் போலீஸ் என்று ஒருவர் பேசினார். அவரிடம் நான், பெங்களூருவில் தங்கி இருப்பதாகவும், தனக்கு சொந்தமாக வாகனம் ஏதும் இல்லை என்றும், சமீபத்தில் நான் மும்பைக்கு வரவில்லை என்றும் விளக்கினேன்.

தொடர்ந்து அந்த நபர் என்னை ஸ்கைப்பில் வரும்படி அழைத்தார். நானும் மறுமுனையில் பேசுவது போலீஸ்தான் என்று நம்பி ஸ்கைப்பில் இணைந்தேன். மறுமுனையில் பேசிய நபர் போலீஸ் என்று கூறி அடையாள அட்டையை அனுப்பினார். பின்னர் எனது ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களை சேகரித்தனர். தொடர்ந்து எனக்கு பல வங்கிகளில் கணக்குகள் இருப்பதாகவும், அவை பயங்கரவாத நிதிக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறி பயமுறுத்தினர். மேலும் நிதித்துறை அதிகாரி என்று மற்றொருவரும் தொடர்ந்து பேசினார்.

பின்னர் அவர் எனது ஒரு வங்கி கணக்கில் இருந்த ரூ.48ஆயிரத்து 325யை அவர்களது கணக்குக்கு மாற்ற சொன்னார்கள். பரிவர்த்தனை சரிபார்ப்புக்கு பிறகே பணம் திருப்பித் தரப்படும் என்றனர். இதேபோல் நான் எனது 2 வங்கி கணக்குகளில் இருந்து ரூ.96ஆயிரத்து 650யை மாற்றினேன். இந்த நிலையில் நான் எனது தோழியிடம் இதுகுறித்து கூறினேன். அவர் இது போலியானது, எனவே இனி பணம் அனுப்பவேண்டாம் என்று கூறினார். இதையடுத்து மீண்டும் அவர்களிடம் பணத்தை கேட்டபோது, எனது பணத்தை திரும்ப தர மறுத்து எனது போன் இணைப்பை துண்டித்து விட்டனர். இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார். இதையடுத்து சம்பிகேஹள்ளி போலீசார் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

“என்னால புரிஞ்சுக்க முடியல” கீழடி விவகாரம்.. கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழில் பதிலடி

Posted by - June 12, 2025 0
கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிட தங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார். கீழடி ஆய்வு அறிக்கைகள் ஏற்கனவே…

கேரளாவில் வேலையில்லா திண்டாட்டம்: அரசு பியூன் வேலைக்காக குவிந்த என்ஜினீயர்கள்- பி.டெக் பட்டதாரிகள்

Posted by - October 28, 2023 0
கொச்சி: இந்தியாவிலேயே அதிக கல்வி அறிவு பெற்ற மாநிலம் என பெயர் பெற்ற கேரளாவில் வேலையில்லா திண்டாட்டமும் அதிகமாக இருப்பதை அங்கு நடந்த ஒரு சம்பவம் எடுத்து…

ஆசிரியரை சீரழித்த மாணவி.. 7 ஆண்டுகளுக்குப்பின் வெளியான பின்னணி.. கேரளாவில் பரபரப்பு…

Posted by - April 19, 2025 0
கேரளாவில், பாலியல் குற்றச்சாட்டால், ஒரு ஆசிரியரின் வாழ்க்கை சீரழிந்த நிலையில், 7 ஆண்டுகளுக்குப்பின் நடந்த அந்த சம்பவத்தால் அவரது வாழ்க்கையே மாறியிருக்கிறது. அந்த சுவாரஸ்ய நிகழ்வு என்ன…

மீண்டும் அதிகரித்த தங்கம், வெள்ளி விலை.! ஒரே நாளில் ரூ.4000 உயர்வு- நகைப்பிரியர்களுக்கு ஷாக்

Posted by - January 17, 2026 0
 தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில் இன்றும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளதா.? என்பதை தற்போது பார்க்கலாம்.. ராக்கெட் வேகத்தில் தங்கம்…

கடன்பட்டது 100 ரூபாய்… 30 ஆண்டுக்கு பிறகு 10 ஆயிரம் ரூபாயாக திருப்பி கொடுத்த ஆசிரியர்

Posted by - June 8, 2023 0
திருவனந்தபுரம் : கேரள மாநிலம் கோழஞ்சேரியை சேர்ந்தவர் பாபு (வயது 62). இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்தநிலையில் 53 வயது மதிக்கத்தக்க ஒருவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *