எதிர்நீச்சல் சீரியல்
திருச்செல்வம் அவர்கள் பல வருடங்களுக்கு முன் கோலங்கள் என்ற தொடரை இயக்கி மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.
அதன்பிறகு சில காலம் அவரது பெயர் பெரிய அளவில் வலம் வரவில்லை, தற்போது எதிர்நீச்சல் சீரியல் மூலம் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
பெண் அடிமை, ஆணாதிக்கம் என இப்போதும் சமூகத்தில் ஆண்களால் கஷ்டப்படும் பெண்கள் குறித்த தொடராக எதிர்நீச்சல் உள்ளது.
இந்த தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்து மக்களை கவர்ந்தார்.
திடீர் மரணம்
30 வருடங்களுக்கு மேல் சினிமாவில் இருந்தாலும் அவருக்கு ரீச் கொடுத்தது எதிர்நீச்சல் என்ற சீரியல் தான். இப்போது தான் வெற்றியை நோக்கி அவரது பயணம் தொடங்கியது ஆனால் அதற்குள் அவரது மரணமும் நிகழ்ந்துவிட்டது.
இந்த நிலையில் தற்போது எதிர்நீச்சலில் மாரிமுத்துவின் கடைசி காட்சி சமூக வலைதளங்களில் ஷேர் ஆக ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.