விண்வெளியில் கீரை, தக்காளி விளைவித்த சீன வீரர்கள்

200 0

பீஜிங்:

அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இணைத்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளது. அதே போல் சீனா, சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளது. விண்வெளியில் டியாங்காங் என்ற ஆய்வு மையத்தை உருவாக்கி ஆய்வு செய்து வருகிறது. இதற்காக சீன விண்வெளி வீரர்கள் அங்கு தங்கி உள்ளனர்.விண்வெளியில் விவசாயம் : சீன ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு - ஐபிசி தமிழ்
கடந்த மே மாதம் 30-ந்தேதி, ஷென்சோ-16, விண்கலத்தில் விண்வெளி வீரர்களான ஜிங்ஹைபெங், ஜூ யாங்சு மற்றும் சீனா ஏரோனாட்டிக்ஸ் பல்கலைகழகத்தின் பேராசிரியர் குய் ஹைச்சாலோ ஆகிய 3 பேர் பயணம் செய்து சீன விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார். அங்கு அவர்கள் காய்கறிகள் பயிரிட்டனர்.

கீரை, சின்ன வெங்காயம், செர்ரி, தக்காளி செடிகளை வளர்த்தனர். பூமியில் தேவையான சூரிய வெளிச்சம், தண்ணீர் இருப்பதால் செடிகள் எளிதில் வளரும். ஆனால் விண்வெளியில் இந்த சாத்தியகூறுகள் இல்லாததால் சீனா சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருந்த செடிகளை பயிரிடுவதற்கான சிறப்பு சாதனத்தை உருவாக்கி இருந்தது.

தாவர வளர்ச்சிக்கு தேவையான வெப்பநிலை, ஈரப்பதம், ஆக்சிஜன், கார்பன் டை-ஆக்சைடு உள்ளிட்டவை சரியான அளவில் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. அவர்கள் பயிரிட்ட கீரை, செர்ரி, தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவை நன்கு வளர்ந்துள்ளது. இதையடுத்து அவற்றை அவர்கள் அறுவடை செய்துள்ளனர். இந்த  குழுவினர் விண்வெளியில் ஆய்வை முடித்துவிட்டு அடுத்த மாதம் பூமிக்கு வர உள்ளனர். முன்னதாக விண்வெளியில் காய்கறி செடிகளை வளர்த்து அறுவடை செய்யும் முயற்சியில் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி வீரர்கள் சாதனை படைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

திருப்பி அடித்த சீனா.. வெந்த புண்ணில் பாய்ந்த வேல்.. தாங்குவாரா ட்ரம்ப்..?

Posted by - April 5, 2025 0
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிகளால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் வீழ்ந்துள்ளன. குறிப்பாக அமெரிக்காவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், சீனா அதே அளவு வரியை…

பிரேசிலில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்வு

Posted by - February 21, 2023 0
ரியோ டி ஜெனிரோ: பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் சவொ பாலோ மாகாணத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.…

அமெரிக்காவில் எலும்பை உறைய வைக்கும் குளிர்.. சமாளிக்க முடியாமல் 22 பேர் பலி!

Posted by - December 27, 2022 0
கடும் பனியுடன் மணிக்கு 65 மைல் வேகத்தில் காற்றும் வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள் முடக்கம் அமெரிக்காவில் வீசும் பனிப்புயலால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில்…

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் – மகளிரை பெருமைப்படுத்த சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

Posted by - March 8, 2023 0
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சிறப்பு டூடுல் வெளியிட்டு பெண்களை கூகுள் கவுரவித்துள்ளது. பெண்களுக்‍கு பெண்கள் ஆதரவாக இருக்‍க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், தன் சக பெண்களுக்‍கு…

கனடா காட்டுத்தீயால் 8 கோடி அமெரிக்கர்கள் அசுத்த காற்றை சுவாசிக்கும் அபாயம்

Posted by - June 30, 2023 0
வாஷிங்டன் : கனடாவின் ஆல்பர்ட்டா பகுதியில் கடந்த மாதம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. 76 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *