தமிழகத்தில் இன்று மிக கனமழை எச்சரிக்கை: 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

210 0

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்து உள்ள நிலையில் இயல்பான அளவைவிட குறைவாகவே பெய்துள்ளது. வழக்கமாக நவம்பர் மாதத்தில் சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவைவிட குறைவாகவே பெய்துள்ளது.

வங்கக்கடலில் ஒரே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தீபாவளிக்கு முன்பு மழை பெய்தது. தமிழகத்தில் தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்த போதிலும் வட மாவட்டங்களில் போதுமான அளவு பொழிவு இல்லை.மிக கனமழை..... தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை | Etamilnews

வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழக கடலோரம் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் 27-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று (22-ந்தேதி) அநேக இடங்களில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் அநேக இடங்களில் லேசான மழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழையும் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும். 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. இடை இடையே விட்டு விட்டு பெய்த மழை விடிய விடிய பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகள், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இன்று காலையிலும் பலத்த மழை பெய்தது.

Related Post

விளாம்பழம்.. வியக்க வைக்கும் பழம்.. பெண்கள் இந்த விளாம்பழத்தை சாப்பிடலாமா.. அடடே இது தெரியாம போச்சே

Posted by - December 22, 2023 0
சென்னை: பல வியாதிகளை குணப்படுத்தும் அற்புத பழம்தான் விளாம்பழம்.. பெண்கள் இந்த பழத்தை சாப்பிடலாமா? விளாம்பழத்தில், இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும், வைட்டமின் A சத்துக்களும் நிறைந்துள்ளன.. பித்தத்தை போக்கக்கூடிய…

சூறாவளிக்காற்று.. இடி மின்னலுடன் மழை.. புது அலெர்ட் கொடுத்த வானிலை மையம்

Posted by - December 20, 2022 0
weather update | சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என…

மீண்டும் ஜெயில்.. அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு!

Posted by - December 15, 2023 0
திண்டுக்கல்: லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை டிசம்பர் 28 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் அரசு…

இந்தமுறை கார்.. வாரம் ஒரு சர்ச்சை.. விளம்பரம் தேடுகிறாரா டிடிஎப் வாசன்.? தியேட்டர் வாசலில் நடந்தது என்ன?

Posted by - January 3, 2023 0
TTF Vasan : நம்பர் பிளேட் இல்லாத காரில் பயணித்து மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் வாசன். சென்னையில் நம்பர் பிளேட் இல்லாத காரில் பயணித்து போக்குவரத்து…

பழனி கோவிலில் “கந்த சஷ்டி விழா” வருகிற 13-ந்தேதி தொடக்கம்: 18-ம் தேதி சூரசம்ஹாரம்

Posted by - October 28, 2023 0
பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் கந்த சஷ்டி விழா வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொள்வார்கள். அதன்படி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *