பூனை மீசை .. சிறுநீரகத்தை காக்கும் அற்புத மூலிகை.. சிறுநீரக கற்களை நொறுக்கும் “யானை வாங்கி”.. சபாஷ்

226 0

சென்னை:

சிறுநீரக கோளாறுகளை சரிசெய்யும் மூலிகைகள் என்னென்ன தெரியுமா? அதில் ஒருசிலவற்றின் நன்மைகளை பார்ப்போம்..!!

சிறுநீரகத்தில் வலி இருக்கலாம்.. கற்கள் இருக்கலாம்.. தொற்று இருக்கலாம்.. வீக்கம் இருக்கலாம்.. இதுபோன்ற கோளாறுகளுக்கெல்லாம் வீட்டு மருத்துவத்தை நம்பியிருக்க கூடாது. உடனடியாக டாக்டர்களிடம் செல்ல வேண்டும்.

ஆனால், முறையான மற்றும் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் இருந்தால், சிறுநீரக தொற்றுக்களை தடுக்கலாம்.. கற்கள் ஏற்படாமலும் தடுக்கலாம்.பூனை மீசை .. சிறுநீரகத்தை காக்கும் அற்புத மூலிகை.. சிறுநீரக கற்களை  நொறுக்கும் "யானை வாங்கி".. சபாஷ் | Do you know the Amazing Uses of Poonai  Meesai Mooligai and what are the ...

தேங்காய் தண்ணீருடன் எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தாலே சிறுநீரகத்துக்கு மிகவும் பாதுகாப்பு என்கிறார்கள். அந்தவகையில், எத்தனையோ காய்கறிகள், பழங்கள்,, தானியங்கள் சிறுநீரக பாதுகாப்புக்கு உதவுகின்றன.. அந்தவகையில், ஒருசில மூலிகைகளை பார்ப்போம்.

நீர்முள்ளி:

நீர்முள்ளி என்ற முட்கள் நிறைந்த மூலிகை உள்ளது.. பெரும்பாலும் இது, ஆண்களின் குறைபாடுகளை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது.. ஆனாலும், சிறுநீரக நோய்களையும் வாத நோய்களையும் எதிர்த்து நிற்கக்கூடியது இந்த நீர்முள்ளி விதைகள்.. இந்த நீர்முள்ளியுடன், சுரைக்கொடி, நெருஞ்சில், வெள்ளரி விதை, சோம்பு, கடுக்காய்த் தோல், நெல்லிக்காய், சரக்கொன்றைப் புளி போன்றவற்றை சேர்த்து, ஒரு பானை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து மருந்தாக தருவார்கள்.

இதனால், தடையில்லாமல் சிறுநீர் இறங்கி, சிறுநீரக கோளாறுகள் நீங்கும்.. அதேபோல, இந்த நீர்முள்ளிச் சாம்பலையும் நாயுருவிச் சாம்பலையும் நீரில் கலந்து சிறுநீரக நோய்களுக்கு பயன்படுத்துவார்கள்.. இந்த நீர்முள்ளிச் சாம்பலை வெந்நீரில் கரைத்து வீக்கம் உள்ள இடங்களில் பூசுவார்கள்..

யானை வாங்கி:

அதேபோல, சிறுநீரகக் கோளாறுகளை சரிசெய்யக்கூடிய மூலிகை, “யானை வணங்கி” அதாவது பெரு நெருஞ்சில் என்பார்கள்.. சர்வ சாதாரணமாக வயல் வெளிகளில், நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் வளர்ந்திருக்கும் செடி.. சிறுநீரக நோய்களுக்கு வலி நிவாரணியாக இதை பயன்படுத்துவார்கள். இந்த பெரு நெருஞ்சில் செடியை, வேர்களுடன் எடுத்து, சுத்தம் செய்து 2 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, சுண்ட காய்ச்சி குடித்தால், சிறுநீரக கற்கள் எல்லாம் உடைந்து சிறுநீரின் வழியே வெளியேறிவிடும்.

இதில், பூனை மீசை மூலிகையின் பங்கு அபாரமானது.. அதாவது, ஆரம்பக்கட்ட சிறுநீரகப் புற்று நோயையும் குணமாக்கும் சக்தியை கொண்டது இந்த பூனை மீசை மூலிகைக்கு உள்ளது. இந்த செடியின் பூக்கள், பார்ப்பதற்கு பூனை மீசை போலவே இருக்கும் என்பதால், இந்த பெயர் வந்ததாம்… துளசி இலை போலவே இருக்கும். அதனால், சீரக துளசி, ஜாவா தேயிலை என்றும் சொல்கிறார்கள்.

நெல்லிக்காய்:

இதன் இலைகளுடன், மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து, தினமும் நெல்லிக்காய் அளவு 2 வேளை உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், சிறுநீரக செயலிழப்பு உட்பட சிறுநீரக கோளாறுகள் அத்தனையும் நீங்கிவிடும். சிறுநீரக பாதிப்பு என்றாலே நீரிழிவு நோயையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது.. சர்க்கரை நோய் அதிகமாகிவிட்டால், அதை கட்டுக்குள் கொண்டுவர இந்த மூலிகை உதவுகிறது..

சிறுநீரக உபாதைகளை தவிர, ரத்தக்கொதிப்பு, ரத்த அழுத்த பிரச்சனைக்கும், இந்த மூலிகை உபயோகமாகிறது.. அதனால்தான், சித்தா, ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

சர்க்கரை அளவு:

உடலில் தேவையில்லாத உப்புக்கள், மற்றும் கெட்ட நீரை வெளியேற்றுகிறது இந்த பூனை மீசை. அதாவது, ரத்தத்தில் உள்ள யூரியா, க்ரியாடின் அளவை குறைக்க செய்வதுடன், ரத்தத்தையும் சுத்தம் செய்கிறது. உப்புக்களை சிறுநீர் மூலம் வெளியேற்ற செய்வதால், உடல் எடையும் வெகுவாக குறைகிறது.. அத்துடன், சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், இந்த மூலிகையே அவைகளை கரைத்து வெளியேற்றிவிடும்.

Related Post

இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்

Posted by - December 2, 2025 0
சென்னையில் கடந்த 24 மணி நேரமாக வெளுத்து வாங்கிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (02.12.2025) நள்ளிரவு எண்ணூர்-மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும்…

எதிர்நீச்சலில் இவர் தான் இனி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பவரா??வெளியான Recent தகவல்!

Posted by - September 13, 2023 0
எந்த ஒரு கலைஞனும் சினிமாவில் நுழைந்த உடனே வெற்றியை காண்பது இல்லை என்று தான் சொல்லவேண்டும்…எல்லோருமே பல போராட்டங்களுக்கு பிறகு தான் பலரும் வெற்றிக்கனியை சுவைக்கிறார்கள் என்றே…

டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

Posted by - November 27, 2025 0
வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், வட தமிழகத்தை நோக்கி நகர்வதாகவும், இதனால் சென்னையில் அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வரும்…

பொன்முடி வழக்கில் திருப்பம் – தண்டனையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.. விவரம்!!

Posted by - March 11, 2024 0
தண்டனை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் பொன்முடி மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக வாய்ப்புள்ளது. மீண்டும் எம்எல்ஏ ஆவதால் அமைச்சர் ஆவதற்கும் பொன்முடிக்கு தடையில்லை..   சொத்துக்குவிப்பு வழக்கில்…

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – அடுத்த 3 மணிநேரம் அலெர்ட் கொடுத்த வானிலை மையம்

Posted by - December 11, 2023 0
தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. தென் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *