அக்கு அக்கா உடையுதா முடி.. இதை மட்டும் ட்ரை பண்ணுங்க.. கருகருன்னு தலைமுடி வளர்ச்சிக்கு மாஸ் டிப்ஸ்

243 0

சென்னை:

இன்றைய நவீன சூழலில், தலைமுடி கொட்டுவதும், பலவீமான தலைமுடியும், மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. இதற்கென்று எளிய தீர்வுகள் நம்மிடமே உள்ளன. இதனால், ஓரளவு தலைமுடி கொட்டுவதை சரி செய்ய முடியும்.

போதுமான தண்ணீர், முறையான தூக்கம், அமைதியான மனநிலை, சத்தான சாப்பாடு இவை எல்லாமே தலைமுடி வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிகிறது

-ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், லாவெண்டர் எண்ணெய் இப்படி ஏதாவது தலைமுடிக்க பயன்படுத்தலாம். வைட்டமின் A அதிகமுள்ள உணவான, கீரை, கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு, பால், முட்டை, மாம்பழம், பப்பாளி, தர்பூசணி இப்படியான உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும். எலுமிச்சை ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ் ஏதாவது ஒன்றை சாப்பிட்டு வரவேண்டும்.அக்கு அக்கா உடையுதா முடி.. இதை மட்டும் ட்ரை பண்ணுங்க.. கருகருன்னு தலைமுடி  வளர்ச்சிக்கு மாஸ் டிப்ஸ் | Do you know the Excellent Benefits of Butter and  what are the Amazing ...

முக்கியமாக முருங்கைக்கீரையையும், கறிவேப்பிலையையும் சமையலில் ஒதுக்கவே கூடாது.. இவை இரண்டும் உணவில் இருந்தாலே, தலைமுடி அதிகமாக வளர துவங்கும்.

– தலைமுடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளருமாம்

– கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து, அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வந்தால் தலைமுடி உதிர்தல் உடனே நிற்குமாம்

– வெண்டைக்காய் தலைமுடிக்கு மிகச்சிறந்த “இயற்கை கண்டிஷனராக” செயல்படுகிறது.. வெண்டைக்காயை கொதிக்க வைத்த தண்ணீரில் சேர்த்து, சிறிது எலுமிச்சம் சாறு பிழிந்து, அந்த தண்ணீரில் தலைமுடியை அலசினால், தலைமுடிக்கு நல்ல பளபளப்பு கிடைக்கும்.. முடிகளும் உறுதியாகும்.

– தலைமுடியை சாதம் வடித்த தண்ணீரில் அலசி வரலாம்.. அல்லது மோரில் அலசி வரலாம்.. காரணம், நீர் மோரில் லாக்டிக் அமிலம், கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் D, A, B12, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.. இறந்த செல்களை நீங்கி, தலைமுடி வளர்ச்சியை மோர் ஊக்குவிக்கிறது

– வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளித்துவிடலாம். இதனால் தலைமுடி உதிர்வது நிற்கும்

– வெங்காயத்தை நீரில் போட்டு வேகவைத்து, பிறகு அந்த நீரில் தலைமுடியை அலசிவந்தால் தலைமுடி உறுதியாகும். அல்லது வெங்காயத்தை ஜூஸ் போல எடுத்து, தலைமுடிக்கு மசாஜ் செய்து ஊறவைத்து குளிர்ந்த நீரில் அலசி வந்தாலும் முடி கொட்டுவது நிற்கும்..

– ஒரு டம்ளர் பீரில் தலைமுடியை மசாஜ் செய்து அலசலாம்.. அல்லது வினிகரையும், தண்ணீரில் கலந்து தலைமுடிக்கு தடவி மசாஜ் செய்யலாம்.

– வெந்தயம், குன்றிமணி இரண்டையும் தூள் செய்து, ஒரு வாரம் தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

– அவுரி, கரிசாலை, கறிவேப்பிலை இந்த மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து, தினமும் மூன்று வேளை 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தாலும் தலைமுடி நன்றாக வளரும்.. பலவீனமான முடியும் பலம் பெறும்

– கற்றாழை ஜெல்லை அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து குளித்தாலும் தலைமுடி உறுதியாகும். தேங்காய் பாலுடன், பச்சை கற்பூரவல்லி இலையை சேர்த்து, வெயிலில் காயவைத்து, தலைமுடியில் பூசிவந்தாலும் முடி அடர்த்தியாக வளரும்..

– வாரம் ஒருமுறை வெண்ணெய்யை தலைக்கு தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவி வந்தாலும் முடி நன்றாக வளரும். கறிவேப்பிலை + சின்ன வெங்காயம் இரண்டையும் நன்றாக அரைத்து, தயிருடன் சேர்த்து, தலைக்கு குளித்து வரலாம்.

– இளநீர் + ரோஸ் வாட்டர் இவைகளை ஒன்றாக கலந்து, முடியின் வேர்களில் மசாஜ் செய்து, 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து அலசினால் தலைமுடி வலுப்பெறும்.

Related Post

தென் தமிழகத்தில் இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் கோடை மழை..

Posted by - April 30, 2024 0
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது…

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு!

Posted by - March 28, 2023 0
Ops eps case | அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் அதிமுக பொதுக்குழு…

வந்தாச்சு UPI.. தபால் நிலையங்களிலும் இனி டிஜிட்டல் பணபரிவர்த்தனை செய்யலாம்.. ஆகஸ்ட்டில் அமல்

Posted by - June 28, 2025 0
சென்னை: வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தபால் அலுவலகங்களில் ‛இந்தியா போஸ்ட்’ சார்பில் விரைவில் யுபிஐ மூலம் பணம் வழங்கும் முறை செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கான…

“மாப்பிள்ளைச் சம்பா சாப்பிட்டால், மாப்பிள்ளையாக இருக்கலாம் …” – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை!

Posted by - March 22, 2023 0
மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையாக இருக்கலாம்.! தங்க சம்பா சாப்பிட்டால் தங்கமாக இருக்கலாம் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்தார். வேளாண் நிதிநிலை தாக்கல் செய்த…

பிறந்தது டிசம்பர்… இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வர உள்ள புதிய விதிகள்.!

Posted by - December 1, 2022 0
பலர் தங்களது முக்கியமான பணிகளை அடுத்த மாதம் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். அப்படி முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தை ஒத்தி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *