மீண்டும் ஜெயில்.. அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு!

139 0

திண்டுக்கல்:

லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை டிசம்பர் 28 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் சுரேஷ்பாபு மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருப்பதற்காக லஞ்சம் கேட்டு மிரட்டியதோடு, ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த டிசம்பர் 1ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அவர் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.மீண்டும் ஜெயில்.. அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை மீண்டும் சிறையில்  அடைக்க நீதிபதி உத்தரவு! | Dindigul court order to jail ED officer Ankit  tiwari till Dec 28 ...

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, தான் பெற்ற லஞ்சப் பணத்தை மேலும் சில அதிகாரிகளுக்கு வழங்கியதாகத் தெரிவித்திருந்தார். எனவே லஞ்சப் பணத்தில் வேறு யாருக்கேனும் பங்கு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்து திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கும்படி மனு அளித்திருந்தனர். அந்த மனு நீதிபதி மேனகா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கு விசாரணைக்காக மதுரை மத்திய சிறையிலிருந்து அங்கித் திவாரி பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவரது சார்பில் வழக்கறிஞர் செல்வம் என்பவர் ஆஜரானார். லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்கில் மேலும் சில முக்கிய தகவல்கள் சேகரிக்க உள்ளதால் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

இதற்கு அங்கித் திவாரியின் வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கேட்ட 3 நாள் காவலை வழங்கி உத்தரவிட்டார். பின்னர் மீண்டும் 14 ஆம் தேதி (இன்று) கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே, அங்கித் திவாரி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை திண்டுக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் அவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். மருத்துவர் சுரேஷ் பாபுவுக்கு எதிராக அமலாக்கத்துறையில் எந்த வழக்கும் இல்லை, அப்படி இருக்கும்போது நான் எப்படி லஞ்சம் கேட்டிருக்க முடியும் என அதில் தெரிவித்திருந்தார் அங்கித் திவாரி.

இந்நிலையில் லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மேனகா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை டிசம்பர் 28 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அங்கித் திவாரியை டிசம்பர் 28 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி மேனகா உத்தரவிட்டுள்ளார்.

Related Post

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. 50 லட்சத்தை தட்டி செல்லப்போகும் அந்த ஒரு போட்டியாளர் யார் தெரியுமா….

Posted by - January 13, 2024 0
பிக் பாஸ் பைனல் நாளை பிக் பாஸ் பைனல் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் யார் வெற்றிபெற்று கோப்பையை தன்வசப்படுத்த போகிறார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. விஷ்ணு, மாயா,…

டிட்வா புயலால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு அபாயம்: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

Posted by - November 29, 2025 0
திருச்சி: டிட்வா புய​லால் பல்​வேறு மாவட்​டங்​களில் வெள்ளப் பாதிப்பு ஏற்​படும் என்று தனி​யார் வானிலை ஆய்​வாளர் ந.செல்​வகு​மார் கூறி​னார். இது தொடர்​பாக அவர் மேலும் கூறிய​தாவது: இலங்​கை​யில் இருந்து…

ரூ.1000 மகளிர் உரிமை தொகை மேல்முறையீடு.. இணையதளம் முடக்கம்.. தவிக்கும் பெண்கள்!

Posted by - September 22, 2023 0
 மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், இணையதளம் முடங்கியுள்ளதால் விண்ணப்பதாரர்கள்…

தனியார் சேனல்களில் கட்டண உயர்வு.. கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!

Posted by - February 25, 2023 0
தனியார் சேனல்களின் கட்டண உயர்வை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும்…

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

Posted by - January 1, 2023 0
தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல் 38 சதவீதமாக உயர்த்தப்படும். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”அரசின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *