திருப்பதி:
திருப்பதியில் 99 சதவீத பக்தர்கள் செய்யும் தவறுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். அது போல் பண்டிகை காலங்கள், பிரம்மோற்சவம் , விடுமுறை காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி தரிசிக்க வரும் பக்தர்கள் எந்த மாதிரியான விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என திருப்பதி ஏழுமலையானே கூறியுள்ளாராம். அவர் சொன்ன விதிகளை 99 சதவீதம் பக்தர்கள் கடைப்பிடிப்பதில்லை.
திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் எந்த மாதிரியான விஷயங்களை செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
* முதலில் வராஹ சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும்.
* பிறகு ஸ்ரீனிவாச பெருமாள் என்னை தரிசிக்க வேண்டும் என விதிகளை வகுத்தார். ஆனால் 90 சதவீதம் பக்தர்கள் கோயிலின் புராணம் தெரியாமல் நேரடியாக ஸ்ரீவாரியை தரிசனம் செய்ய சென்றுவிடுகிறார்கள்.
* புஷ்கரணியில் குளிக்காவிட்டாலும் முகம், கை, கால்களை அலம்பிக் கொண்டு தலையில் தண்ணீர் தெளித்துக் கொண்டு வராஹ சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும். ஸ்ரீவெங்கடேஸ்வர சாமியை தரிசனம் செய்யச் சென்றால் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
அது போல் சிலர் சொல்வது என்னவென்றால் கோவிந்த ராஜ பெருமாளை தரிசித்துவிட்டு அலமேல் மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரையும் தரிசிக்க வேண்டும். அது போல் வராகமூர்த்தியையும் தரிசனம் செய்ய வேண்டும். பிறகு நேராக மேல் திருப்பதி வந்து புஷ்கரணியில் நீராடிவிட்டு ஸ்ரீவாரியை தரிசிக்க வேண்டும் என்கிறார்கள். திருப்பதி கலியுக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. இதனால் இங்கு வைத்த கோரிக்கை உடனடியாக நிறைவேறும் என்பது ஐதீகம். ஏழு கடல், ஏழு மலைகளை தாண்டிதான் ஏழுமலையானை தரிசனம் செய்கிறோம் என சொல்வதுண்டு. முதலில் பெருமாளின் பாதங்களை தரிசிக்க வேண்டும். பின்னர் கீழிருந்து மேலாக செல்ல வேண்டும் .
அப்போது மார்பில் இருக்கும் மகாலட்சுியை தரிசனம் செய்ய தவறக் கூடாது. இதன் பிறகுதான் அவரது முகத்தை தரிசனம் செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் திருப்பதி செல்லும் போது கடைப்பிடியுங்கள். அது போல் திருப்பதியில் வரிசையில் நிற்கும் போது கோவிந்த நாமத்தை சொல்லிக் கொண்டே செல்ல வேண்டுமே தவிர ஊர் கதை, உறவு கதையெல்லாம் பேசிக் கொண்டு செல்லக் கூடாது.