“தளபதி டிவி”.. விஜயகாந்த் சேனலை வாங்கும் விஜய்! சுளீர் பிளான்! என்ன நடக்குது?

335 0

சென்னை: தமிழக வெற்றி கழகம் சார்பாக புதிய சேனல் தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக இரண்டு திட்டங்களை அவர் கையில் எடுத்துள்ளாராம்.
நடிகர் விஜய் லோக்சபா தேர்தலுக்கு பின்பாக தமிழக வெற்றி கழகம் குறித்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட உள்ளாராம். முக்கியமாக 2026 சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிட போகும் தொகுதி தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என்கிறார்கள்.

லோக்சபா தேர்தல் முடிந்ததும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த உள்ளாராம். அதன்பின் அவர் தான் போட்டியிட போகும் தொகுதியில் இரண்டாம் பொதுக்கூட்டத்தை நடத்துவாராம். அதை தொடர்ந்து 2 வருட நீண்ட தேர்தல் பணிகளை அவர் நடத்த உள்ளாராம்.

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். அவரின் தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்சிக்கான சின்னம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பொதுக்கூட்டம்: தேர்தல் ஆணையத்தில் இந்த பெயர் முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கட்சி தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கைதான் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அவர் மதுரை அல்லது கோவை இரண்டு இடங்களில் ஒன்றில் முதல் பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளாராம். 2024 லோக்சபா தேர்தல் முடிந்து பெரும்பாலும் மே கடைசி வாரம் இந்த கூட்டம் நடக்கும் என்கிறார்கள்.இதில் விஜயின் கட்சி கொள்கைகள், விஜய் தலைவரா, பொதுச்செயலாளரா ? கட்சி சின்னம், கொடி கலர் எல்லாம் முறையாக வெளியிடப்படும். கட்சி நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்படுவார்கள். அதோடு கட்சியின் எதிர்கால திட்டங்கள் என்னென்ன என்பதையும் அவர் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது ., சேனல்; தமிழக வெற்றி கழகம் சார்பாக புதிய சேனல் தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக இரண்டு திட்டங்களை அவர் கையில் எடுத்துள்ளாராம். அதன்படி புதிதாக ஒரு சேனலை தொடங்கலாம். ஆனால் புதிதாக சேனலை தொடங்கினால் அனுமதி வாங்குவது தொடங்கி அதை பிரபலம் செய்வது வரை பல விஷயங்கள் கஷ்டமாகும்.அதே சமயம் ஏற்கனவே உள்ள சேனலை வாங்கினால்.. அதை எளிதாக பிரபலப்படுத்த முடியும். இதனால் ஏற்கனவே உள்ள விஜய்காந்த்தின் கேப்டன் டிவியை விஜய் வாங்க பேசி வருகிறாராம். தளபதி டிவி என்ற பெயரில் சேனலை நடத்தும் திட்டத்தில் விஜய் இருக்கிறாராம். விஜய் டிவி என்று ஏற்கனவே உள்ளது.
இதனால் அதே பெயரை வைக்க முடியாது. அதனால் வேறு பெயரை வைக்க நடிகர் விஜய் முடிவு எடுத்துள்ளாராம். இதற்காக தளபதி டிவி என்ற பெயரை வைக்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளாராம். எங்கே போட்டி : யாரும் எதிர்பார்க்காத வண்ணம் விஜய் தென் மண்டலத்தில் போட்டியிட உள்ளாராம். முக்கியமாக திருச்சி அல்லது நெல்லையில் அவர் போட்டியிட முடிவு செய்துள்ளாராம். இங்கே இருந்து எளிமையாக எம்எல்ஏ ஆகலாம் என்ற நம்பிக்கை காரணமாக அவர் நெல்லை அல்லது திருச்சியில் இருந்து களமிறங்க வாய்ப்பு உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Post

ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..

Posted by - June 12, 2025 0
பொன்முடி ஓசி பஸ் என சொன்னது சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டும் திமுக MLA-ஏ இப்படி சொல்லியிருப்பது எதிர்க்கட்சியினரின் விமர்சன வலையில் சிக்கியுள்ளது. பெண்கள் ஓசி பஸ்ஸில்…

எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!

Posted by - December 31, 2024 0
தமிழ்த் திரையுலகினர், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏன் அமைதி காக்கின்றனர் என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் குவிந்து வருகின்றன.. தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின்போது…

கொளுத்தும் கோடை! – ஏசி விற்பனை உயர்வு…!

Posted by - April 24, 2024 0
கோடை வெயில் கொளுத்தும் நிலையில், மக்கள் தங்கள் இல்லங்களில் மின்விசிறி, ஏசி இல்லாமல் இருக்க முடிவதில்லை. மதிய நேரத்தில் மட்டுமில்லாமல் இரவு நேரங்களிலும் வீட்டின் உள்ளே அனல்…

திருவாரூர், நாகையில் திடீர் மழை – விவசாயிகள் கவலை

Posted by - February 28, 2023 0
நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவினாலும், தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள்…

தீபாவளி ஸ்பெஷலாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்கள்- முழு விவரம் இதோ

Posted by - November 1, 2023 0
தீபாவளி ஸ்பெஷல் தொலைக்காட்சிகளில் எல்லா மாதங்களும் சீரியல்கள் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால் ஏதாவது ஒரு ஸ்பெஷல் தினம் வந்துவிட்டால் போதும் படங்களாக ஒளிபரப்பி விடுவார்கள். அப்படி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *