திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

212 0

கோவையை தமிழக அரசு புறக்கணிப்பதாக குற்றஞ்சாட்டி முன்னாள் அமைச்சர் வேலுமணி சார்பில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சியாக இருந்தது. விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியது அதிமுக அரசு. கோவைக்கு மட்டும் அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கோவைக்கு மட்டும் 28 தடுப்பணைகள் அதிமுக ஆட்சியில் கட்டுக்கொடுக்கப்பட்டுள்ளன. மக்கள் நலன் கருதி அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக அரசு ரிப்பன் வெட்டி உரிமை கொண்டாடுகிறது. அதிமுக கொண்ட வந்த கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டது. திமுக ஆட்சியில் கோவைக்கு மட்டுமில்லை தமிழகத்திற்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை. 18 மாத திமுக ஆட்சியில் தமிழக மக்கள் வேதனையில் உள்ளனர். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக திமுக அரசு கைவிடுகிறது. ஒரு அரசு எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு திமுக அரசின் 18 மாத கால ஆட்சி சான்று. இவ்வாறு கூறினார்.

Related Post

நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி

Posted by - February 17, 2025 0
இந்தி திணிப்பை திமுக எதிர்க்கிற இலட்சணம் இதுதானா?” என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. PM SHRI திட்டத்தில் திமுக தலைமையிலான தமிழக அரசின் கடித்தத்தை வெளியிட்டு அதிமுக…

’’அமைச்சர் பொன்முடிக்கு பட்டை நாமம்’’- பதவியை பறித்த முதல்வர் ஸ்டாலின்- இதுதான் காரணமா?

Posted by - April 11, 2025 0
திமுக துணை பொது செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் பொன்முடி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தந்தை பெரியார் திராவிடர் கழக…

”யாரு அந்த விஜய்?” துரைமுருகன் பாணியில் ஹேண்டில் பண்ணுங்க” திமுக அறிவுறுத்தல்..?

Posted by - March 4, 2025 0
”இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்காத, திமுகவின் கட்டமைப்புக்கு அருகே கூட வர முடியாத விஜய்க்கு பதில் சொல்லி பெரிய ஆளாக ஆக்க வேண்டாம் என அறிவுறுத்தல்”…

வேதனை தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!!

Posted by - October 29, 2024 0
விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்த த.வெ.க.வினர் சாலை விபத்தில் சிக்கி…

“என்னை உலக நாயகன் என யாரும் அழைக்கவேண்டாம்” – ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்!

Posted by - November 11, 2024 0
கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது என கமல்ஹாசன் கருத்து. தன்னை எந்தவிதமான அடைமொழியுடனும் அழைக்க வேண்டாம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *