மேற்கு வங்க முதலமைச்சராக மம்தா பானர்ஜி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், மம்தா பானர்ஜி விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக அக்கட்சி X தளத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளது. அதில் அவர் நெற்றி உள்ளிட்ட முகம் முழுவதும் ரத்தம் கசிந்து ஓடும் புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Our chairperson @MamataOfficial sustained a major injury.
Please keep her in your prayers 🙏🏻 pic.twitter.com/gqLqWm1HwE— All India Trinamool Congress (@AITCofficial) March 14, 2024
எனினும், விபத்து எப்படி நடந்தது என்ற விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. மம்தா பானர்ஜிக்கு படுகாயம் ஏற்பட்டுள்ள சம்பவம் கட்சியினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.