பிரபல சின்னத்திரை நடிகையான ரித்திகா தான் கர்ப்பமாக இருப்பதையே செம க்யூட்டாக அறிவித்துள்ளார்.
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ரித்திகா தமிழ் செல்வி.
முதல் சீரியல் தொடரிலேயே மக்களின் மனம் கவர்ந்த இவருக்கு ஏரளமான ரசிகர்கள் பட்டாளம் குவிந்து வந்தது .இதையடுத்து குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட இவர் அந்த நிகழ்ச்சியின் மூலமும் ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தினார் .
இதையடுத்து பாக்கியலட்சுமி சீரியலில் அம்ரிதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் கடந்த 2022-ம் ஆண்டு வினு என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்
இவர்களது திருமணம் கேரளாவில் மிக எளிமையாக நடைபெற்று பின்னர் சென்னையில் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
திருமணத்திற்கு பின் சீரியலில் நடிப்பதை மெல்ல மெல்ல குறித்து வந்த இவர் தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாய் க்யூட்டான பதிவின் மூலம் அறிவித்துள்ளார்.