கார்த்திகை தீபத்திருவிழா மகா தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்

370 0

ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 6-ந்தேதி காலை பரணி தீபம் மாலை 6 மணிக்கு மாலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. தீபத் திருவிழாவையொட்டி தொடர்ந்து இரவு மாட வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் வீதி உலா நடந்து வருகிறது. நேற்று இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தீபத் திருவிழாவில் 7-வது நாளான இன்று பஞ்ச மூர்த்திகள் மகா தேரோட்டம் நடந்தது. காலை 6.45 மணிக்கு விநாயகர் தேர் புறப்பாடு நடைபெற்றது. ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா மகா தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்
இதைத் தொடர்ந்து விநாயகர் தேர் நிலைக்கு வந்த பிறகு முருகர் தேரோட்டம் நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு மேல் அருணாசலேஸ்வரர் மகாதேரோட்டம் நடந்தது. அதனைத் தொடர்ந்து பெண்களால் இழுக்கப்படும் அம்மன் தேரோட்டமும், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறுகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். ரத வீதிகளில் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்துச் சென்றனர். ராஜகோபுரம் முன்பு ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் பக்தர்கள் பரவசத்துடன் காணப்பட்டனர். கார்த்திகை தீபத்திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும் நாளன்று நேர்த்தி கடனாக கரும்பில் சேலையால் தொட்டில் கட்டி தங்கள் குழந்தையை சுமந்தபடி மாட வீதியை வலம் வருவார்கள். அதன்படி, இன்று ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். தேரோட்ட த்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன.
#thiruvannamalai #deepam #Live

Related Post

இரட்டை இலை சின்னம் யாருக்கு.? சிதறுமா வாக்குகள்.. திரும்பும் எம்.ஜி.ஆர். கால வரலாறு!?

Posted by - February 3, 2023 0
AIADMK : ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு தனி சின்னத்தில் போட்டியிட்டால் யாருக்கு லாபம்? அதிமுக வாக்குகள் சிதறுமா? இரட்டை இலை சின்னம் முடங்க தான் காரணமாக…

ஓபிஎஸ் என்பது ஒரு முடிந்து போன கதை… ஒட்டுமொத்த இயக்கமே இபிஎஸ் பின்னால் இருக்கு ; கடம்பூர் ராஜு!!

Posted by - January 20, 2024 0
ஓபிஎஸ் என்பது ஒரு முடிந்து போன கதை என்றும், ஒட்டுமொத்த இயக்கமே எடப்பாடியார் பின்னால் உள்ளது என தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.…

எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரை.. அதிமுக பொதுச் செயலாளர்கள் லிஸ்ட்..!

Posted by - March 28, 2023 0
அதிமுகவின் 8-வது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இதுவரை பொதுச் செயலாளர் இருக்கையில் அமர்ந்தது யார் யார் என்று தற்போது பார்க்கலாம்.…

”களத்திற்கே வராத தற்குறி தளபதி” விஜயை கடுமையாக விமர்சித்த திமுக அமைச்சர் சேகர்பாபு

Posted by - December 7, 2024 0
Minister SekarBabu: ”களத்திற்கே வராத தற்குறி” தான் விஜய் என திமுக அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார். Minister SekarBabu: வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்…

முதல்வர் மருந்தகம் துவங்குவது எப்படி… B.Pharm / D.Pharm படித்தவர்களுக்கு செம்ம சான்ஸ்…

Posted by - November 8, 2024 0
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகங்கள் துவங்குவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இத்திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்துவது தொடர்பாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *