அதிமுக ஆட்சியை விமர்சிக்க தகுதி வேண்டும். குடும்ப ஆட்சி நடத்தும் ஸ்டாலினுக்கு எந்தவித தகுதியும் இல்லை என கோவையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறினார்.
தமிழகத்தில் நடப்பது குடும்ப ஆட்சி என்றும், அதிமுகவை பற்றி அவதூறாக பேசுவதை முதலமைச்சர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.DMK
திமுக அரசை கண்டித்தும், குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும் கோவை சிவானந்தா காலனி பகுதியில், அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.ADMK NEWS
இதில் பங்கேற்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களை திமுக அரசு ஒவ்வொன்றாக கைவிட்டு வருகிறது என்றும், மக்களுக்காக புதிய திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்துள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார்.ஒரு ஆட்சி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு திமுகவின் ஆட்சி உதாரணமாக உள்ளது. தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது. ஸ்டாலின் பொம்மை முதல்வராக உள்ளார். எனவே அதிமுக குறித்து அவதூறு பரப்புவதை முதலமைச்சர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறிய அவர், 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி என்றும் தெரிவித்தார்.
53 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், தொழிற்சாலைகள் முடங்கியுள்ளதால் தொழில் வளமும் பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறினார்.
மின்கட்டண உயர்வால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் நடந்து வருவது குடும்ப ஆட்சி என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
Related Post
“என்னை உலக நாயகன் என யாரும் அழைக்கவேண்டாம்” – ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்!
கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது என கமல்ஹாசன் கருத்து. தன்னை எந்தவிதமான அடைமொழியுடனும் அழைக்க வேண்டாம்…
விஜய் பிரசாரம்; தவெக-விற்கு செல்லுமிடமெல்லாம் சிக்கல் தான்; கரூரில் கருணை காட்டாத காவல்துறை
தவெக-விற்கு செல்லும் இடமெல்லாம் சிக்கல் தான் என்று சொல்லும் அளவிற்கு, விஜய்யின் கரூர் பிரசாரத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எல்லாம் அனுமதி பிரச்னை தான். என்னவென்று பார்க்கலாம். 2026…
அதிமுக+ Vs தவெக: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது யாருக்கு அதிக பாதிப்பு?
ஒருவழியாக 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துவிட்டது தேமுதிக. பிரேமலதா எடுத்த இந்த அதிரடி முடிவால், அதிமுக கூட்டணிக்கு ஏற்படப்போகும் இழப்புகள் என்ன? தவெகவின் மனநிலை…
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.?
தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தமிழகத்தில் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் பாலியல் சம்பவங்கள் மக்களை அதிர்ச்சி அடையசெய்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பாக…
2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க இலக்கு.. தவெக அறிவிப்பு
சென்னை பனையூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளின் கூட்டத்திற்கு பிறகு அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த பிப்ரவரி…
Categories
- MEMES (12)
- அரசியல் (184)
- இந்தியா (463)
- உலகம் (170)
- சினிமா (809)
- தமிழ்நாடு (1,078)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (234)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (83)
Recent Posts
- இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் – டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு?

- பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.!

- தமிழகத்தில் என்டிஏ ஆட்சி: மேட்ரிஸ் – ஐஏஎன்எஸ் கருத்துக் கணிப்பில் தகவல்

- ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!

- ஒவ்வொரு ஏரியாவுக்கும் வரும் விஜய்.. பக்கா பிளான்.. அடுத்து இந்த ஊர் தானா?

