கார்த்திகை பொரி உருண்டை செய்ய ரெசிபி..!

272 0

Karthigai deepam | திருகார்த்திகைக்கு உகந்த பொரி உருண்டையை எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

நம் மரபில் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விசேஷமான உணவு நைவேத்தியமாகச் செய்து படைக்கப்படுவது வழக்கம். விநாயகர் சதுர்த்திக்குக் கொழுக்கட்டை, மகரசங்கராந்திக்குச் சர்க்கரைப் பொங்கல், நவராத்திரிக்குச் சுண்டல் என்பதுபோல திருக்கார்த்திகைக்குப் பொரி உருண்டை.

தேவையானவை:

நெல் பொரி

வெல்லம்

நெய்

பல்பல்லாகக் கீறிய தேங்காய் சிறிது

பொதுவாக அரைக்கிலோ பொரிக்குக் கால்கிலோ வெல்லம் என்பது கணக்கு. அதுடன் தேவையான அளவில் தண்ணீர்

செய்முறை:

1. முதலில் வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைத்துக் கொள்ளவும்.
2. பின்பு அதை இறக்கி வடிகட்டி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
3. கரைத்த வெல்லத்தைப் பாகு பதத்திற்குக் காய்ச்சவும்.
4. ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து, அதில் இரண்டு சொட்டுப் பாகை ஊற்றி கையால் உருட்டிப் பார்க்கவும்.
5. பாகு நன்றாக உருட்ட வந்தால் இறக்கி அதைப் பொரியில் கொட்டி, தேங்காய்த் துண்டுகளையும் அதோடு சேர்த்துக் கிளற வேண்டும்.
6. பின்பு கைகளில் நெய் தடவிக்கொண்டு சூடு ஆறும் முன்பாக உருண்டைகளாகப் பிடிக்கவும்.
7. நெல் பொரிபோலவே, அரிசிப் பொரி, அவல் பொரியிலும் இந்த உருண்டையை செய்யலாம்.

Related Post

அவசரப்பட்டு Nothing Phone 2a வாங்கிடாதீங்க..

Posted by - May 25, 2024 0
“என்னது? முதல் நாள் விற்பனையிலேயே 1 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி சக்கைபோடு போட்ட நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) ஸ்மார்ட்போனை வாங்க வேண்டாமா.. ஏன்?”…

உடல் சோர்வைப் போக்கும் மகராசனம்

Posted by - April 19, 2023 0
தொடர் பணி, நீண்ட தூர பயணம், அலைச்சல் போன்ற காரணங்களால் உடம்பு ரொம்ப களைப்பாக இருக்கிறதா? மகராசனத்தில் கால் மணி நேரம் இருந்தால் போதும், அத்தனை களைப்பும்…

கணவன், மனைவிக்குள் சிறந்த வயது வித்தியாசம் என்ன தெரியுமா?

Posted by - March 27, 2023 0
பொதுவாக திருமணம் என்றாலே வயது வித்தியாசம் பார்ப்பது முக்கியமாகும். ஏனெனில் வயதை வைத்து தான் ஒருவரின் பக்குவமான செயல்முறைகள் காணப்படும். அதே போன்று திருமண ஜோடிகளின் வயது…

ரீல் ஜோடி இனிமேல் ரியல் ஜோடியா..

Posted by - January 29, 2024 0
சிம்பு 40 வயதாகும் சிம்பு இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இவருடைய காதல் கதைகள் அனைவருக்கும் தெரிந்தது தான். நடிகை நயன்தாராவை காதலித்து வந்த சிம்புவிற்கு ஒரு…

பிளாக் டீ இப்படி குடிங்க… நீண்ட ஆயுளுடன் இருப்பீங்க..!

Posted by - November 23, 2024 0
பிளாக் டீ நம்முடைய இதய ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. தினமும் பிளாக் டீ குடிப்பது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் என்று பல…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *