உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் Smoke Biscuit?? அதிரடி உத்தரவிட்ட உணவுப்பாதுகாப்புத்துறை

317 0

ஸ்மோக் பிஸ்கட்களை, குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம் என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.

திரவ நைட்ரஜனை பயன்படுத்தி தயாரிக்கும் ஸ்மோக் பிஸ்கட்டை சிறுவன் ஒருவர் உட்கொண்டு துடிதுடித்த காட்சி இணையத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், குறிப்பிட்ட அந்த காட்சி ஐதராபாத்தில் பொருட்காட்சியில் எடுக்கப்பட்டது என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் ஸ்மோக் பிஸ்கட் உட்கொள்ள வேண்டாம் எனவும் அது உயிருக்கு ஆபத்தானது எனவும் உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு ஸ்மோக் பிஸ்கட் வாங்கித் தர வேண்டாம் எனவும், சென்னையில் ஸ்மோக் பிஸ்கட் தயாரிக்கும் இடங்களில் ஆய்வு நடத்தி, அதன் பாதிப்பு குறித்து விளக்கி சுற்றறிக்கை கொடுக்கப்பட்ட நிலையில் மேலும் ஆய்வு நடத்தப்படும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தேவைப்படும் இடத்தில் மட்டும் திரவ நைட்ரஜன் பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவை மீறி அதை பயன்படுத்தினால் உணவு பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவு பாதுகாப்புத் துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Post

சிப்காட் தொழிற்சாலையில் இருந்து சட்ட விரோதமாக வெளியேற்றப்படும் ஆலை கழிவுகளால் 10 கி.மீ. சுற்றளவுக்கு நீர் ஆதாரம் பாதிப்பு

Posted by - July 8, 2023 0
பெருந்துறை: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. இதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த 2700 ஏக்கர் நிலம் பெறப்பட்டு இந்த…

20 லட்சம் மதிப்புள்ள 557 கிலோ நாட்டு வெடிகள் 204 மூலப்பொருள் மூட்டைகளை பறிமுதல்

Posted by - October 31, 2023 0
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார்கோயில் காவல் சரகத்திற்கு உட்பட்ட நாகரசம்பேட்டை கிராமத்தில் ரமேஷ்குமார் என்பவர் வீட்டில் வெடி பொருட்கள் மற்றும் வெடி தயாரிப்பதற்கான மருந்து பொருட்கள்…

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருகை… ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்கிறார்!

Posted by - February 20, 2024 0
கட்சியின் தொண்டர்கள் அழைத்தார்கள் அதனால் தேசிய செயற்குழு கூட்டத்தில் தரையில் அமர்ந்தேன் – அண்ணாமலை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வரும் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள…

உங்கள் கனவில் முருகன் வந்தாரா? அப்போ இதுதான் அர்த்தம் பக்தர்களே!

Posted by - November 11, 2025 0
முருகப்பெருமான் உங்கள் கனவில் தோன்றினால் அதற்கு என்ன அர்த்தம்? என்பதை கீழே விரிவாக காணலாம். தமிழ்க் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். தைப்பூசம், கார்த்திகை…

வெறும் வேர் போதுமே.. நாடி வருபவருக்கு நலனை மட்டுமே தரும் நன்னாரி.. கல்லீரலின் நண்பன் நன்னாரி வேர்கள்

Posted by - November 25, 2023 0
சென்னை: ஒரு கொடியின் வேர், இலை, பழம் என அனைத்துமே நன்மைகளை வாரி தருகிறது என்றால் அது நன்னாரிதான்.. தலைவலி முதல் பால்வினை நோய் வரை போக்கக்கூடிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *