தற்போது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர் என்பது தான் உண்மை. அதேபோல் இந்தியா முழுவதும் கூகுள் பே (google pay), போன்பே (phonepe), பேடிஎம் (paytm) போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனஅதவும் இந்த பிரபலமான யுபிஐ (UPI) செயலிகளின் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கு ஸகேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் ஷாப்பிங் செய்யும் போதும் கட்டணம் செலுத்தினால், சில தவறுகளைத் தவிர்க்க வேண்டும்.குறிப்பாக உங்களின் சிறு கவனக்குறைவு கூட பெரும் பணத்தை இழக்க வழிவகுக்கும். எனவே நீங்கள் கவனமாக யுபிஐ கட்டணத்தைச் செலுத்த வேண்டும். மேலும் இந்த உங்களது வங்கி கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க, யுபிஐ மூலம் பணம் செலுத்தும் போது செய்யக்கூடாத தவறுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். யுபிஐ ஐடி: யுபிஐ செயலிகளில் தவறான யுபிஐ ஐடியை (upi id) உள்ளிடுவது தவறு. இந்த சிறிய தவறு மூலம் தெரியாத நபரின் கணக்கிற்கு உங்களது பணம் சென்றுவிடும். எனவே சரியான யுபிஐ ஐடியை தெரிந்துகொண்டு அதில் பணம் அனுப்புவது சிறந்தது.
QR குறியீடு: ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் கடைகளில் QR குறியீடுகளை ஸ்கேன் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக QR குறியீடு சரியானது தானா என்று உறுதி செய்துவிட்டு பணம் அனுப்பவும். சில சமயம் மோசடி செய்பவர்கள் QR குறியீடுகளை உருவாக்கி மக்களை ஏமாற்றலாம். தெரியாத இணைப்புகள்: அதேபோல் உங்களது போனில் யுபிஐ பணம் செலுத்தச் சொல்லும் தெரியாத இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். குறிப்பாக உங்கள் போனுக்கு வரும் ஒடிபி-ஐ யாருக்கும் கொடுக்காதீர்கள். அதாவது எவ்வளவு நம்பகமானவர்கள் என்று தோன்றினாலும் இந்த தவற்றைச் செய்யவே கூடாது.
பணம் பெறுபவரின் பெயர்: யுபிஐ மூலம் அதிக கட்டணம் செலுத்தவேண்டிய நிலைமை இருந்தால், பணம் பெறுபவரின் பெயர் மற்றும் யுபிஐ ஐடி மற்றும் தொகையை எப்போதும் இருமுறை சரிபார்க்கவும். அதேபோல் உங்களது செயலியை எப்போதும் புதுப்பித்த நிலையில் வைத்திருங்கள். அதாவது உங்கள யுபிஐ செயலியை எப்போதும் லேட்டஸ்ட் அப்டேட்டில் வைத்திருக்க வேண்டும்.
கடவுச்சொல்: அதேபோல் உங்களது வங்கி கணக்கிற்கு நீங்கள் பயன்படுத்தும் கடவுச்சொல்லை இந்த யுபிஐ-க்கு பயன்படுத்த வேண்டாம். அதாவது யுபிஐ-க்கு வேறு கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும். குறிப்பாக உங்கள் யுபிஐ பின்னை அவ்வப்போது தவறாமல் மாற்றவும்.
பின் அல்லது பேட்டர்ன்: நாம் அனைவரும் போன்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட யுபிஐ செயலிகளை பயன்படுத்தி வருகிறோம். ஒருவேளை போன் காணாமல் போனால் அதில் உள்ள யுபிஐ செயலிகளை அணுகி மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே திரைக்கு எப்போதும் பின் அல்லது பேட்டர்ன் பூட்டு போடுவது மிகவும் நல்லது. குறிப்பாக யுபிஐ பின் எண் மற்றும் பிற வங்கி சார்ந்த எண்களை போனில் சேமித்து வைக்க கூடாது எஸ்எம்எஸ்: இந்த யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தும் மக்கள் தினமும் தங்களுக்கு வரும் எஸ்எம்எஸ்-களை செக் செய்ய வேண்டும். ஒருவேளை உங்கள் அனுமதி இல்லாமல் பரிவர்த்தனை ஏதேனும் நடந்து இருந்தால் அதை உடனே புகார் தெரிவிக்க வேண்டும்.
Read more at: https://tamil.gizbot.com/news/avoid-these-mistakes-in-upi-transactions-to-protect-your-money-check-details-here-045977.html