புஷ்பா படத்தில் வந்த பேமஸ் பாடலுக்கு க்யூட்டாக நடனமாடிய நடிகை மீனாவின் வீடியோ வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன் . இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘புஷ்பா: தி ரைஸ்’.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பல மொழிகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது .
இதுமட்டுமின்றி இப்படம் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது . இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்ட பொருட் செலவில் உருவாகி வருகிறது.
புஷ்பா படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது சமந்தா நடனத்தில் ஆண்ட்ரியா குரலில் வந்த ஊ சொல்றியா மாமா பாடல் . இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்றது .
இதேபோல் சமீபத்தில் புஷ்பா 2 படத்தில் இடம் பெற்றுள்ள “புஷ்பா புஷ்பா” பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .
இந்நிலையில் பிரபல நடிகை மீனா இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது சமூக வலைதளப்பாக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.