ஆனால், குழந்தைகள் முதலில் எழுதப் பழகும்போது அடிக்கடி தவறு செய்வதால், பேனாவுக்குப் பதிலாக பென்சிலில் எழுதப் பழக்கப்படுத்தப்படுகின்றனர்.
சிறுவயதில் அனைவரும் அப்சரா மற்றும் நடராஜ் பென்சில்களை பயன்படுத்தி உள்ளோம். ஆனால் அதை தயாரிப்பது யார் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
அனைவருக்கும் தங்களின் குழந்தைப் பருவம் மறக்க முடியாத ஒன்று. பள்ளிக்கூடம், நண்பர்கள், விளையாட்டு, புத்தகங்கள், பென்சில்கள், டிபன் பாக்ஸ் என்று அனைத்துமே நமக்கு இனிமையான நினைவுகளை தரும். அதேபோல் சாக்பீஸில் எழுத தொடங்கிய நாம், அடுத்ததாக பென்சிலில் எழுத தொடங்கினோம். சிறுவயதில் பென்சில் பயன்படுத்தாத குழந்தைகளே இல்லை என்று சொல்லலாம். மேலும், பென்சில் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது அப்சரா அல்லது நடராஜ் பென்சில்கள் தான். இந்த பென்சில்கள் தொடர்பான ஒரு செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.பொதுவாக பள்ளிக் குழந்தைகள் முதலில் பென்சிலில் எழுதக் கற்றுக் கொள்கிறார்கள். அதனை தொடர்ந்து பேனாவில் எழுதுகிறார்கள். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் பென்சிலை பயன்படுத்துகின்றனர். ஆனால், குழந்தைகள் முதலில் எழுதப் பழகும்போது அடிக்கடி தவறு செய்வதால், பேனாவுக்குப் பதிலாக பென்சிலில் எழுதப் பழக்கப்படுத்தப்படுகின்றனர்.நம் நாட்டில் பல பிரபலமான பிராண்டுகளின் பென்சில்கள் உள்ளன. ஒவ்வொரு மாணவரும் சிறுவயதிலிருந்தே நூற்றுக்கணக்கான பென்சில்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த பென்சில்களை தயாரிப்பது யார்? என்று யோசித்திருக்க மாட்டோம். ஆனால், அப்சரா மற்றும் நடராஜ் பென்சில்கள் இரண்டுமே ஒரே நிறுவனத்தை சேர்ந்தவை என்பது உங்களுக்கு தெரியுமா?. முதலில் நடராஜ் பென்சிலை தான் மாணவர்கள் அதிகம் பயன்படுத்தினார்கள். சில வருடங்களுக்குப் பிறகு அப்சரா பென்சில் விற்பனைக்கு வந்தது. அதை தொடர்ந்து நடராஜை விட அப்சரா பென்சிலின் விற்பனை அதிகரித்தது.விலையை பொறுத்தவரை, நடராஜ் பென்சிலை விட அப்சரா பென்சில் அதிகமாக இருந்தாலும், அப்சரா பென்சிலே அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு பென்சில்களும் ஹிந்துஸ்தான் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்றாலும், தரத்தில் சிறிய வித்தியாசம் இருப்பதால், அனைவரும் அப்சரா பென்சிலை வாங்குகின்றனர்.