“ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு” கொதிக்கும் உதயநிதி!

28 0

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் பற்றவைத்த சுயமரியாதை நெருப்பு இந்தியா முழுவதும் காட்டுத்தீ போல பரவியுள்ளது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

மும்மொழிக் கொள்கை, நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் பற்றவைத்த சுயமரியாதை நெருப்பு இந்தியா முழுவதும் காட்டுத்தீ போல பரவியுள்ளது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். பல தென்மாநிலத் தலைவர்கள் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேச ஆரம்பித்து இருக்கிறார்கள் என கூறியுள்ளார். ஸ்டாலினை தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி. ராமாராவ் ஆகியோர் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதிரடியாக பேசிய துணை முதல்வர் உதயநிதி:

சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அதில் பேசிய அவர், “புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நிதி கொடுக்க மாட்டோம் என்று மத்திய கல்வி அமைச்சர் மிரட்டுகிறார்.

ஆனால், இவர் மிரட்டினால் பயப்பட நாம் அதிமுக அல்ல. திமுக. இங்கு எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடக்கவில்லை. மு.க. ஸ்டாலின் ஆட்சி நடக்கிறது என்பதை மத்திய அரசு உணர வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய துணை முதல்வர் உதயநிதி, “தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிக்க முடியாது. தமிழ்நாட்டிற்குள் இந்தியை அனுமதித்தால் நம்முடைய தாய்மொழியே அழிந்துவிடும். தமிழ்நாட்டில் எப்பொழுதும் இருமொழிக்கொள்கைதான். இந்தியை திணிக்க குறுக்கு வழியில் மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. நீங்கள் மிரட்டினால் பயப்பட நாங்கள் அதிமுகவோ, எடப்பாடி பழனிசாமியோ கிடையாது.

“ஸ்டாலின் பற்றவைத்த நெருப்பு”

மும்மொழிக் கொள்கை, நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் பற்றவைத்த சுயமரியாதை நெருப்பு இந்தியா முழுவதும் காட்டுத்தீ போல பரவியுள்ளது. பல தென்மாநிலத் தலைவர்கள் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேச ஆரம்பித்து இருக்கிறார்கள்” என்றார்.

ஸ்டாலினின் குற்றச்சாட்டை தொடர்ந்து, தென் மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி. ராமாராவ் ஆகியோர் இதுகுறித்து பேசியுள்ளனர்.

ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்த கே.டி. ராமாராவ், “ஸ்டாலினுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். மேலும், இந்த விஷயத்தில் அவரை முற்றிலும் ஆதரிக்கிறேன். தேசத்திற்கு மிகவும் தேவைப்படும்போது, ​​குடும்பக் கட்டுப்பாட்டு திட்டங்களை முறையாகசெயல்படுத்தியதற்காக தென் மாநிலங்களை நீங்கள் தண்டிக்க முடியாது.

தென் மாநிலங்களின் முயற்சிகளைக் கருத்தில் கொள்ளாமல் தொகுதி மறுசீரமைப்பை செயல்படுத்துவது ஜனநாயகம், கூட்டாட்சி இல்லை” என்றார்.

Related Post

“திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தின் கடன் அதிகரிப்பு” – இபிஎஸ் குற்றச்சாட்டு

Posted by - February 19, 2024 0
சென்னை: “திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சுமார் 8 லட்சத்து 33 ஆயிரத்து 361 கோடி கடன் உயர்ந்திருக்கிறது. இந்த கடன் மேலாண்மையை சரி செய்வதற்காக, ஒரு…

தவமா? சரித்திரமே கிடையாது: மீண்டும் கெடுத்துவிட்ட அண்ணாமலை? செம டென்ஷனில் இபிஎஸ்!

Posted by - March 8, 2025 0
எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்தது கிடையாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அதிமுக தவம்…

யாருக்கும் பாதுகாப்பில்லாத ஆட்சி.. திமுக அரசு மீது விஜய் தாக்குதல்

Posted by - November 14, 2024 0
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் தீவிர அரசியலில் இறங்கியுள்ள நிலையில் மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தும், அறிக்கைகள் வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் தனது…

சட்டப்பேரவை சர்ச்சை : அடுக்கடுக்கான விமர்சனங்கள்… ஆளுநர் தரப்பு கொடுத்த விளக்கம்..!

Posted by - January 9, 2023 0
Governor RN ravi | தமிழக சட்டசபையில் நடைபெற்ற நிகழ்வுகள் தற்போது பேசும் பொருளாகியுள்ளது. இந்த நிலையில் ஆளுநர் உரை குறித்து ஆளுநர் தரப்பு விளக்கமளித்துள்ளது. அரசாங்கத்தை…

மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Posted by - March 22, 2024 0
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 19.04.2024 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *