சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் ஐந்தாவது சீசனுக்கான ப்ரோமோ நேற்று பிரமாண்டமாக வெளியாகி இருக்கும் நிலையில் இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற உத்தேச பட்டியல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.அதில் தொகுப்பாளர் பிரியங்கா முதல் யூடியூப்பர் மற்றும் ரிவியூவராக இருக்கும் இர்ஃபான் வரை பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அது குறித்து விரிவாக பார்க்கலாம்அந்த வகையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் வழக்கமாக கலந்து கொள்ளும் பல கோமாளிகள் இதில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று கூறப்படுகிறது அதே நேரத்தில் பாலா இந்த சீசனிலும் இல்லையாம். அதுபோல இந்த நிகழ்ச்சியில் குக்குகளாக கலந்து கொள்ள பல துறைகளில் இருந்தவர்களிடமிருந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதிலிருந்து ஒரு சிலர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.ஸ்ரீகாந்த் தேவா: இசையமைப்பாளர் தேவாவின் மகனாகவும் தமிழ் சினிமாவில் சுமார் 100 படங்களில் இசை அமைத்த ஸ்ரீகாந்த் தேவா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் பாடலோடு சேர்ந்து அதிகமான கண்டெண்டும் கிடைக்கும் என்பதால் இவரை தேர்ந்தெடுப்பதாக கூறப்படுகிறது. வசந்த்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் வசந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே முதல் சீசனில் இருந்து விக்ரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது போல இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலமாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.திவ்யா துரைசாமி: நடிகை திவ்யா துரைசாமி ஒரு சில சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தாலும் சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படத்தில் பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தார். அதே நேரத்தில் இன்ஸ்டாகிராமில் இவருக்கு அதிகமான இளைஞர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர். அதனாலேயே இவரும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.நடிகர் வி. டி. வி கணேஷ்: அந்த வகையில் நடிகர் சிம்புவின் நண்பராகவும், தயாரிப்பாளராகவும், முன்னணி நடிகராகவும் இருக்கும் விடிவி கணேஷ் இந்த நிகழ்ச்சியில் குக்காக அறிமுகமாக இருக்கிறார். இவருடைய காமெடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கும் நிலையில் இவருக்கு இந்த வாய்ப்பு சிம்பு மூலம் கொடுக்கப்பட்டதா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏற்கனவே விஜய் டிவி நிகழ்ச்சியில் நடிகர் சிம்புவின் நட்பு வட்டாரத்தில் இருந்து ஒரு சிலர் ஒவ்வொரு முறையும் கலந்து கொண்டு வருகிறார்கள். கடந்த பிக்பாஸில் கூட கூல் சுரேஷ் கலந்து கொண்டு இருந்தார். அதுபோல இவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. இர்ஃபான்: யூடியூப்பராகவும் உணவை ரிவ்யூ செய்து வீடியோ வெளியிட்டே பிரபலமான யூடியூப்பர் இர்ஃபான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். ஏற்கனவே இவர் குறித்து அதிகமான விமர்சனங்கள் கிளம்பி வருவது வழக்கம்தான். இந்த நிலையில் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் இணையத்தில் அதிகமாக பேசப்படும் என்றும் முடிவு எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.பிரியங்கா தேஷ் பாண்டே: அதுபோல பிரியங்கா விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமாகி இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் குக்காக இந்த முறை களமிறங்க போகிறார் என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்துகொண்டு பெரிய அளவில் பிரபலம் அடைந்தது போல குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனிலும் கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது. அதுபோல சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த தினேஷ் மற்றும் பூர்ணிமா ரவி ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அது போல புதுச்சேரியில் இயற்கை விவசாயம் செய்து வரும் பிரான்ஸ்காரரான கிருஷ்ணா மெக்கன்சி என்பவரிடமும் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறதாம். அதுபோல இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு முறையும் சீனியர் நடிகர் நடிகைகள் யாராவது கலந்து கொள்வார்கள். அந்த வரிசையில் இந்த முறை அம்பிகா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பு உத்தேச பட்டியல் வெளியாவது வழக்கம்தான். அதில் அடிப்படும் பெயர்களில் இருப்பவர்கள் தான் அதிகமாக அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் இந்த முறை மேலே கூறியவர்களுடைய பெயர்கள் அடிபடுகிறது. ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
- Home
- பொழுதுபோக்கு
- குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளர்கள் லிஸ்ட்.. ரிவியூவர் முதல் இத்தனை பிரபலங்களா?
Related Post
தினமும் நள்ளிரவிற்கு பின் தூங்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கா..? எதுக்கும் எச்சரிக்கையா இருங்க!
தினமும் நள்ளிரவுக்கு பின் தூங்குவதை பழக்கமாக கொள்ளும் பொழுது நமது உடலின் இயற்கை சர்க்காரின் கடிகாரம் சீர்குலைக்கப்பட்டு, அதனால் ஹார்மோன் வெளியீடு, வளர்சிதை மாற்றம் மற்றும் உடல்…
சினிமாவை தாண்டி நடிகர் விஜய் இத்தனை தொழில்கள் செய்கிறாரா?- இதுதான் முக்கிய தொழிலா?
நடிகர் விஜய் தமிழ் சினிமா நடிகர் என்ற லிஸ்டில் பல வருடங்களாக ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர். தரமான படங்கள், ரசிகர்களுடன் எப்போதும் பணிவாக இருந்து வரும்…
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற மனம் இன்றி எலிமினேட் ஆன ஆர்.ஜே.ஆனந்தி – சாச்சனா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து, இந்த வாரம் வெளியேறிய ஆர்.ஜே.ஆனந்தி மற்றும் சாச்சனா இருவருமே பெரிய தொகையுடன் தான் வெளியேறி உள்ளனர் என கூறப்படுகிறது.…
முதல் சீசனில் டி.என்.ஏ டெஸ்ட்… இதுல என்னவா இருக்கும்? பாரதி கண்ணம்மா 2 சீரியல் புது அப்டேட்!
பாரதியாக புதிதாக களம் இறங்குகிறார் சிபு சூர்யன். ரோஜா சீரியலில் அர்ஜுன் சாராக இவர் செய்த சாகசங்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சின்னத்திரை ரசிகர்களின் பேச்செல்லாம் பாரதி…
முத்து முதலிடம்.. 2ம் இடம் பிடித்தது இவர்தான்! டாப் 5 உறுதியான லிஸ்ட் இதோ
பிக் பாஸ் 8ம் சீசன் இன்று நிறைவு பெறுகிறது. பரபரப்பாக நடந்து முடிந்த இந்த ஷோவில் முத்து தான் டைட்டில் வின்னர் என்பது தெரிந்த தகவல் தான்.…
Categories
- MEMES (12)
- அரசியல் (148)
- இந்தியா (399)
- உலகம் (126)
- சினிமா (696)
- தமிழ்நாடு (933)
- பொழுதுபோக்கு (591)
- விளையாட்டு (65)
Recent Posts
- ரிலீஸ் பிரச்சனை இருந்தாலும் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் தக் லைஃப்.. இதுவரை எத்தனை கோடி கலெக்ஷன்?
- ‘சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரா பொன்முடி?’ பதவியை பிடுங்கியும் வாய் பேசுவதால் திட்டம்..!
- ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
- மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
- டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?