உங்கள் BSNL 4G சிம் கார்டில் VoLTE சேவையை எவ்வாறு செயல்படுத்துவது? இதோ வழிமுறைகள்..

66 0

தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டியாகத் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம். அதாவது 4ஜி சேவை, 5ஜி சோதனை, லைவ் டிவி சேனல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது வரை ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தவில்லை.அதுவும் 2024 அக்டோபர் 29ம் தேதி நிலவரப்படி பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டில் 50,000க்கும் மேற்பட்ட 4ஜி தளங்களை நிறுவியுள்ளது. அவற்றில் 41,000க்கும் மேற்பட்டவை இப்போது செயல்பாட்டில் உள்ளன எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 4ஜி சேவை இருக்கும் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வோல்ட்இ (VoLTE) சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக வோல்ட்இ சேவையைப் பயன்படுத்தித் தெளிவான வாய்ஸ் கால் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது பிஎஸ்என்எல் பயனர்கள் 4ஜி மற்றும் 5ஜி சிம்மில் வோல்ட்இ சேவையை எவ்வாறு செயல்படுத்துவது என்பதைப் பார்க்கலாம். வோல்ட்இ (VoLTE) சேவையை எவ்வாறு செயல்படுத்துவது? நீங்கள் பிஎஸ்என்எல் 4ஜி அல்லது 5ஜி சிம் வைத்திருந்தால் 53733 என்ற எண்ணிற்கு ‘ACTVOLTE’ என்ற மெசேஜ் அனுப்பவும். அவ்வளவு தான் உங்கள் சிம் கார்டில் இந்த வோல்ட்இ தொழில்நுட்பம் செயல்படுத்தப்படும். அதேசமயம் இந்த வோல்ட்இ ஆனது பிஎஸ்என்எல் 4ஜி மற்றும் 5ஜி சிம் கார்டுகளுடன் மட்டுமே இணக்கமானது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.ஒருவேளை நீங்கள் பழைய 2ஜி அல்லது 3ஜி சிம் கார்டை பயன்படுத்தி வந்தால், அருகில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்திற்குச் சென்று எந்த கட்டணமும் இல்லாமல் 4G அல்லது 5G மேம்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் டிராய் (TRAI) என்று அறியப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) சமீபத்தில் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜியோவில் (Jio) இருந்து 79.7 லட்சம் கஸ்டமர்கள் வெளியேறி உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து ஏர்டெல் (Airtel) நிறுவனம் 14.3 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமும் 15.5 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. குறிப்பாக நாடு முழுவதும் இன்னும் 5ஜி சேவையை வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் பிஎஸ்என்எல் நிறுவனம் 8.5 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்து அதிரடி காட்டியுள்ளது.குறிப்பாக 4ஜி சேவை மற்றும் பல்வேறு புதிய சேவைகளை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்து வருவதால், தொடர்ந்து இந்நிறுவனத்தில் அதிக வாடிக்கையாளர்கள் இணைந்து வருகின்றனர். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்க வேகமாகச் செயல்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் பிஎன்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் 4ஜி தளங்களை அமைப்பதற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), தேஜாஸ் நெட்வொர்க்ஸ், டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்), ஐடிஐ லிமிடெட் போன்ற இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. குறிப்பாக அனைத்து உபகரணங்களும் இந்திய நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி நெட்வொர்க் “பூரண சுதேசி” (முற்றிலும் உள்நாட்டு) கண்டுபிடிப்பு என்ற கருத்தை உள்ளடக்கியதாகும்.

Related Post

மின் கட்டணம் குறைய போகுது.. வீட்டுக்கே கணக்கெடுக்க வரும் அதிகாரிகள்.. சந்தோஷமான செய்தி

Posted by - November 9, 2023 0
சென்னை: அடுக்குமாடி பொது சேவை மின் கட்டணத்தை குறைப்பு விவகாரத்தில் வீட்டுக்கே வந்து அதிகாரிகள் சோதனை செய்ய தொடங்கி உள்ளனர். எந்த வீடுகள் எல்லாம் பத்து வீடுகள்…

வானிலை அலெர்ட்…!

Posted by - May 10, 2023 0
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை 5.30 அளவில் காற்றழுத்த தாழ்வு…

சர்க்கரை நோயாளிகள் பிஸ்தா சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா அவங்க உடலில் என்ன நடக்குமாம் தெரியுமா?

Posted by - December 26, 2023 0
பிஸ்தா மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான நட்ஸ் வகைகளில் ஒன்றாகும். கூடுதலாக, எந்தவொரு ஆரோக்கியமான உணவுக்கும் இது ஒரு நல்ல கூடுதலாக இருக்கும். உங்கள் இரத்தத்தில் உள்ள…

பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி நாளை முதல் ஸ்டிரைக் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

Posted by - January 8, 2024 0
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாகவும், எனவே திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. பேச்சுவார்த்தைக்கு பின் பேட்டியளித்த தொழிற்சங்க பிரதிநிதிகள்,…

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இர்பான்.. புதிய வீடியோவால் பரபரப்பு..!

Posted by - October 21, 2024 0
குழந்தை பிறக்கும்போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை யூடியூபர் இர்பான் பகிர்ந்திருந்தார். யூடியூபர் இர்பானுக்கு குழந்தை பிறந்த வீடியோவை வெளியிட்ட நிலையில்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *