45 ஆண்டுகாலமாக இருக்கிறேன். ஒரு சின்ன உயிருக்கு கூட தீங்கு விளைவிக்க நினைக்க மாட்டேன். ஜி.கே.மணி இப்படி செய்வாரா என நீங்களும் உங்கள் மனசாட்சி தொட்டு கேட்டுக் கொள்ளுங்கள்.
விழுப்புரம்: பாமக ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளது, விரைவில் ராமதாஸ், அன்புமணி சந்தித்து பேசுவார்கள். தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற வரும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவந்த கௌரவ தலைவர் ஜிகே.மணி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 21 மாநில நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் மாநில மாணவரணி செயலாளர் முரளி சங்கர், மகளிர் அணி மாநில செயலாளர்கள் ஐந்து பேர், தலைவர் ஒருவர் உட்பட 13 மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் பாமகவின் கௌரவ தலைவர் ஜிகே.மணி. தலைமை நிலைய செயலாளர் அன்பழகன். பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் ஆகியோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பேசுவையில்:
தமிழ்நாட்டில் பாமக, வன்னியர் சங்க ஆகியவை வலிமையான அமைப்பு. அந்த வலிமை எப்படி என்பதை மாமல்லபுரம் மாநாடு நிரூபித்துள்ளது. உட்கட்சியில் சலசலப்பு ஏற்படுவது இயல்புதான். அப்படி பாட்டாளி மக்கள் கட்சியில் இன்றைக்கு ஒரு நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. பாமக என்பது ஒரு குடும்ப பாசத்தோடு உள்ள கட்சி இந்த கட்சியில் நெருக்கடி ஏற்பட்டால் விரைவில் சுமூக தீர்ப்பு தீர்வு ஏற்படும் என்கிற நம்பிக்கை உள்ளது. நேற்று இரவு வரை மருத்துவர் ராமதாஸிடம் பேசியுள்ளேன், அதேபோல மருத்துவர் அன்புமணியிடமும் பேசிய உள்ளேன். என் ஆசையும், நோக்கமும் சுமூகமான தீர்வு மிக விரைவில் வரவேண்டும் என்பதுதான். பாட்டாளி மக்கள் கட்சியின் வலிமை மேலும் அதிகரித்து மிக விரைவில் வலிமையோடு தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதுதான். அதற்குண்டான முயற்சியை ஈடுபட்டுள்ளோம். மிக விரைவில் சுமூக தீர்வு வரும் என்ற நம்பிக்கையோடு முயற்சி எடுத்து வருகிறேன். இருவரும் ஒன்றாக சந்திப்பார்கள் பேசுவார்கள் நிறைய விரைவில் நல்ல செய்தி வரும். கட்சி விவகாரத்தை பொதுவெளியில் சொல்லக்கூடாது.
அன்புமணி, ராமதாஸ் ஆகியோர் கருத்து மோதலுக்கு ஜி.கே.மணி தான் காரணம் என பொதுவெளியில் பேசப்படுவது குறித்த கேள்விக்கு:
என்னை விஷம் கொடுத்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்வதற்கு சமமானது இந்த கேள்வி. 45 ஆண்டுகாலமாக இருக்கிறேன். ஒரு சின்ன உயிருக்கு கூட தீங்கு விளைவிக்க நினைக்க மாட்டேன். ஜிகே.மணி இப்படி செய்வாரா என நீங்களும் உங்கள் மனசாட்சி தொட்டு கேட்டுக் கொள்ளுங்கள். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வாய்ப்புகள் வந்தன அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தான் இங்கு இருக்கிறேன். மிக விரைவில் ராமதாசும், அன்புமணியும் சந்திப்பார்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இருவரும் ஒருவரையொருவர் சந்திக்க வேண்டும் என இருவரிடமும் பேசி உள்ளேன் அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். கூட்டணி அமைப்பது தொடர்பாக எல்லாம் இந்த முரண்பாடும் இல்லை. தேர்தலுக்கு முன்பாக இருவரும் சந்தித்து பேசுவார்கள், நல்ல கூட்டணி அமையும். பாமக இடம்பெறும் கூட்டணி தான் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை பாமக உருவாக்கி காட்டும். ஜிகே மணியை பொறுத்தவரை உண்மையாக இருப்பேன் சுவாசமாக இருப்பேன் என்றார்.