பத்ம பூஷன் விருது பெற்றுள்ள நடிகர் அஜித் குமார் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு அப்பலோ மருத்துவமனைக்கு சென்றிருக்கும் அஜித்குமாருக்கு என்ன ஆயிற்று என அவரது ரசிகர்கள் சோகத்துடன் மருத்துவமனை அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழக திரைத்துறையில் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ள அஜித்குமாருக்கு பிற நடிகர்களின் ரசிகர்களும் ஆதரவளிக்கும் நபராக வலம் வருகிறார். தமிழகம் முழுவதும் அவருக்கும் பெரும் வரவேற்பு இருக்கும் நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடே அவருக்கு என்ன ஆயிற்று என்ற எதிர்பார்ப்பில் தவித்து வருகிறது.
நாளை அஜித் தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், அவர் மருத்துவமனைக்கு சென்றிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அஜித் வழக்கமான பரிசோதனைக்கு சென்றிருப்பதாகவே மருத்துவனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.