தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்.. அசைவப்பிரியர்களே உஷார்..

125 0

மீன்பிடி தடை காலம் என்பதால் மீன்கள் விலை வரும் நாட்கள் உயர வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக, ஏப்ரல், மே மாதங்களில் மீன் பிடிக்க, மத்திய அரசு ஆண்டு தோறும் தடை விதிக்கிறது. இக்காலக் கட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடை காலம் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு துவங்கி, ஜூன் 14-ம் தேதி வரை, மொத்தம் 61 நாட்கள் அமலில் இருக்கும்.

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் விசைப்படகுகள் கரைந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நாட்களில் மீன்களின் விலை கடுமையாக உயரக்கூடும் என்பதால் அசைவப் பிரியர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காசிமேடு, வானகரம், திருவான்மியூர், சிந்தாதிரிப்பேட்டை, காவாங்கரை,பெரம்பூர்,வில்லிவாக்கம்,பெரம்பூர்,வில்லிவாக்கம், நொச்சிக்குப்பம்,பட்டினப்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் முக்கிய மீன் மார்கெட்டில் மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் குவிந்தனர்.

 

மீன்பிடி தடை காலங்களில் மீன்களின் விலை கடுமையாக உயரும். ஆனால் இந்த முறை தடைக்காலம் தொடங்கியுள்ளபோதும் மீன்கள் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யபட்டது. இது குறித்து பேசிய மீனவர்கள் தற்போது போதுமான அளவு மீன்கள் கையிருப்பு உள்ளதால் மீன்கள் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் ஆனால் வரும் காலங்களில் மீன்கள் இருப்பு குறைந்தால் மீன்கள் விலை உயர வாய்ப்பு உள்ளதாக கூறினர்.

Related Post

மகனும், மருமகளும் சொத்தையெல்லாம் வாங்கிட்டு அடிச்சு வெளிய அனுப்பிட்டாங்க.. கதறி அழுத மூதாட்டி

Posted by - February 28, 2023 0
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர், தன் மகனும், மருமகளும் சொத்தையெல்லாம் வாங்கிட்டு அடிச்சு வெளிய அனுப்பிட்டாங்க என்று கதறி அழுதார். தமிழ்நாட்டில்…

காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்: வானிலை மையம்

Posted by - November 15, 2023 0
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…

சிப்காட் தொழிற்சாலையில் இருந்து சட்ட விரோதமாக வெளியேற்றப்படும் ஆலை கழிவுகளால் 10 கி.மீ. சுற்றளவுக்கு நீர் ஆதாரம் பாதிப்பு

Posted by - July 8, 2023 0
பெருந்துறை: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. இதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த 2700 ஏக்கர் நிலம் பெறப்பட்டு இந்த…

அடுத்த 10 நாட்களுக்கு: மழைக்கான வாய்ப்பு குறைவு

Posted by - November 24, 2022 0
காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தற்போது தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது. தமிழகத்தின் வட மற்றும் உள்மாவட்டங்களில்…

மனைவியோடு பிரச்சனையை பேசிய தினேஷ்.. உங்களுக்கு நிறைய சொல்ல வேண்டும்.. ரச்சிதா எமோஷனல்

Posted by - November 22, 2023 0
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்று கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்றது. அப்போது நடிகர் தினேஷ் தன்னுடைய மனைவி ரச்சிதாவை பிரிந்த கதை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *