நடிகர் விஜய் லியோ திரைப்படத்தை முடித்த பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
விஜய் 68 படத்தை பற்றி பேசினால் விஜய் திட்டுவார் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 68-வது படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு. இதனை கடந்த சில தினங்களுக்கு முன்பு படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் – யுவன் கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைகிறது.சுனைனா நடித்துள்ள ரெஜினா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பாடலை வெளியிட்ட வெங்கட் பிரபு, மேடையில் படத்தை பற்றி பேசினார். அதன் இறுதியில், அவர் அடுத்து இயக்கவுள்ள விஜய் 68 படத்தைப் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, விஜய் 68 திரைப்படத்தை பற்றி இப்போது பேசினால் விஜய் திட்டுவார். லியோ திரைப்படம் வந்த பிறகு, அதை பற்றி பேசலாம் என்று வெங்கட் பிரபு கேட்டுகொண்டார்.
லியோ திரைப்படத்தை முடித்த பிறகு, நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விஜய் 68 திரைப்படம் குறித்து லியோ வெளியீட்டுக்கு பின் பேசலாம் என வெங்கட் பிரபு தொடர்ந்து கூறி வருகிறார்.