துல்கர் சல்மான்
துல்கர் சல்மான் மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிகம் பரிட்சயமான நடிகர் தான். மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகனான அவர் தற்போது முன்னணி நடிகராக இருந்து வருகிறார்
தற்போது துல்கர் சல்மான் ‘கிங் ஆஃப் கோதா’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த கேங்ஸ்டர் த்ரில்லர் படத்தின் டீசர் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. தற்போது 5 நாட்களில் 11 மில்லியன் பார்வைகளை பெற்று இருக்கிறது.
தூங்கி ரொம்ப நாள் ஆச்சு.. கண்கலங்கி வீடியோ
இந்நிலையில் துல்கர் சல்மான் இன்ஸ்டாவில் கண்கலங்கி ஒரு வீடியோவை பதிவிட்டு சற்று நேரத்தில் நீக்கிவிட்டார்.
” நான் தூங்கி ரொம்ப நாள் ஆச்சு. நான் முதல்முறையாக சந்தித்த விஷயம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அது என் மனதில் இருந்து நீக்கவில்லை. நான் அனைத்தையும் சொல்ல நினைக்கிறேன், ஆனால் சொல்ல எனக்கு அனுமதி இல்லை” என துல்கர் அந்த வீடியோவில் கண்கலங்கி பேசுகிறார்.
அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு என்னாச்சு என வருத்தத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.