சென்னை:
பெண்களின் ஆரோக்கியத்துக்கு கைகொடுக்கக்கூடிய உணவுகள் என்னென்ன தெரியுமா? குறிப்பாக, ஈஸ்ட்ரோஜன் உற்பத்திக்கு உதவக்கூடிய உணவுகள் என்னென்ன தெரியுமா?
ஈஸ்ட்ரோஜன் என்பது பெண்களின் உடலில் காணப்படும் ஒரு பாலியல் ஹார்மோன் ஆகும். பெண்கள் பூப்பெய்தும்போது, ஏற்படும் மாற்றங்களுக்கு இந்த ஹார்மோன் மிகப்பெரிய காரணமாக உள்ளது..
ஹார்மோன்:
இந்த ஹார்மோன் அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும், அது பெண்களின் உணர்வுகளை பெரிதும் பாதிக்கிறது. எனவே, பெண்களின் உடலில் இந்த ஹார்மோன் சரியான அளவில் இருக்க வேண்டும்.
சரியான மாதவிடாய் ஏற்படவும், இனப்பெருக்க ஆரோக்கியம் சிறப்பாக இருக்கவும், இந்த ஈஸ்ட்ரோஜன் தேவையாக உள்ளது.. சிலருக்கு இந்த ஈஸ்ட்ரோஜன் மிகவும் குறைவாக இருக்கும். இதற்கு சில வகை உணவுகள் கைகொடுத்து உதவுகின்றன.
சோயாக்கள்:
அதில், முக்கியமானது சோயா தயாரிப்புகளாகும்.. காணரம், இந்தவகையான சோயாக்களில் காணப்படும் சேர்மங்கள், ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்க செய்கிறது.. ஈஸ்ட்ரோஜன் லெவல் குறைவாக இருந்தால், சோயா மில்க், சோயா தயிர், டோஃபு மற்றும் சோயா கோதுமை மாவு போன்ற சோயா தயாரிப்புகளை சேர்த்து கொள்ளலாம்.
அதேபோல, எள் விதைகளும், ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்க உதவுகிறது.. காரணம், இந்த விதைகளில் லிக்னான்ஸ் நிறைந்திருக்கின்றன.. அந்தவகையில், போஸ்ட்மெனோபாஸ் பெண்களுக்கு, ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்க இந்த விதைகள் பேருதவி புரிகின்றன. இதில், கொண்டைக்கடலையையும் சேர்த்து கொள்ளலாம்.. சிவப்பு பீன்ஸ், பச்சை பட்டாணி போன்றவற்றையும் தாராளமாக சேர்த்து கொள்ளலாம்.
சேனைக்கிழங்கு:
கிழங்கு வகைகளில், சேனைக்கிழங்கில் அதாவது கருணைக்கிழங்கில் இந்த ஈஸ்ட்ரோஜன் கிடைக்கிறது.. கிழங்கில் சிறந்தது கருணை என்பார்கள்.. இந்த சேனைக்கிழங்கில் இருந்துதான், மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கிறார்கள்.. வேகவைத்து மசித்த கருணைக்கிழங்கு, ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொண்டு, இதனுடன் வெல்லம் சேர்த்து கலந்து மாதவிலக்கு முன்பு சாப்பிட்டுவர கைகால் வலி இடுப்பு வலி, வயிற்று வலி, தலைவலி போன்றவை வராமல் இருக்குமாம்.
எனவே, பெண்கள் இதை உணவில் எடுத்துக்கொள்வதால், மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் பிரச்னைகள் கட்டாயம் நீங்கும்.. வலியுடன் கூடிய மாதவிலக்கு, அதிகப்படியான ரத்தபோக்கை தடுக்கிறது.
மெனோபாஸ்:
உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் பலத்தை தருகிறது. பெண்களின் வெள்ளைப்பாடு தொந்தரவுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. பெண்களின் ஹார்மோன் பிரச்னைகளைக் கூட கட்டுப்படுத்தும். முக்கியமாக, 40 வயதுக்கு மேல் வரும் மெனோபாஸ் பிரச்சனையின் போது, பெண்களின் ஈஸ்ட்ரோஜன் அளவை இது அதிகப்படுத்துகிறது.
அதேசமயம், ஆஸ்துமா நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், இதய பாதிப்பு உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், ஒவ்வாமை இருப்பவர்கள், கிழங்குகள் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். அல்லது மருத்துவர்களின் அனுமதியை பெற்றே சாப்பிட வேண்டும்.