விஜயகாந்த் எப்படி இருக்கிறார்! கேப்டனின் உடலில் என்னென்ன பாதிப்புகள் தெரியுமா?

184 0

சென்னை:

சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விஜயகாந்துக்கு என்னென்ன உடல்நிலை பிரச்சினைகள் என்பது குறித்து நமக்கு கிடைத்த தகவல்களை பார்ப்போம்.

தொண்டர்கள், ரசிகர்களால் கேப்டன் என அன்போடு அழைக்கப்படுபவர் விஜயகாந்த். கருப்பாக இருந்தாலும் எந்தத் துறையிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை பலருக்கு ஊட்டியவர். இவர் அரசியலிலும் தடம் பதித்தவர்.

திமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். ஆளும் கட்சி, கூட்டணி கட்சியான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையே எதிர்த்தார். அவர் நினைத்திருந்தால் கூட்டணி கட்சியை எதிர்க்காமல் மக்களுக்கு குரல் கொடுக்காமல் அடுத்தடுத்த நிலைகளை அடைந்திருக்க முடியும்.விஜயகாந்த் எப்படி இருக்கிறார்! கேப்டனின் உடலில் என்னென்ன பாதிப்புகள்  தெரியுமா? | What are the health issues that Vijayakanth having? - Tamil  Oneindia

ஆனால் அவர் வந்ததே மக்களுக்கு சேவை செய்யத்தானே! அதனால் அவர் எந்த வித சமரசங்களுக்கும் இடம் தரவில்லை. இந்த நிலையில் விஜயகாந்த் பல ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர் அவ்வபோது வெளிநாடுகளில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் அவர் தற்போது மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இல்லை என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருக்கு என்னென்ன உடல் உபாதைகள் இருக்கின்றன என்பது குறித்து நெருங்கிய வட்டாரங்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதை பார்ப்போம். விஜயகாந்துக்கு நீரிழிவு நோய், தைராய்டு, கல்லீரல் பிரச்சினை உள்ளிட்டவை இருக்கிறது.

இந்த நீரிழிவு நோயால் கால் விரல்களுக்கு ரத்த ஓட்டம் பாயாமல் இருந்ததால் வலது கால் விரல்களில் சிலவற்றை மியாட் மருத்துவமனை கடந்த 2022 ஆம் ஆண்டு அகற்றியது. தைராய்டு பிரச்சினையால் அவரது பேச்சு பாதிக்கப்பட்டது. அதற்கு சிகிச்சை கொடுத்து வந்தார்கள். அதன் பிறகு அவ்வப்போது பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனக்கு செல்வார், உடனே ஓரிரு நாட்களில் வீடு திரும்பிடுவார். சிறுநீரக பிரச்சினை இருந்தது. அது நாளடைவில் சரியானது. அவருக்கு முதுகுதண்டு வடத்திலும் பிரச்சினை இருக்கிறது. தைராய்டும் சேர்ந்து இருப்பதால் கழுத்தில் இணைந்திருக்கும் தண்டுவடத்தின் நரம்பு பாதிக்கப்பட்டு அவருக்கு ஞாபக மறதி இருந்து வந்தது. அது போல் அரை மணி நேரம் கூட உட்கார முடியாமல் தவித்து வந்தார்.

இதனால் அவரை கடந்த சில மாதங்களாகவே நண்பர்களோ உடன் நடித்தவர்களோ பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இதை ராதாரவி கூட குமுறலாகவே கொட்டியிருப்பார். இதற்கு பிரேமலதாவும் விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக அனுமதிக்கப்பட்டார். நாங்களுக்கு ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றுதான் நினைத்தோம்.

ஆனால் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். தானாக சுவாசிக்க முடியவில்லை. தற்போதுள்ள மழை சீசனும் அவர் விரைந்து நலம் பெற தடையாக இருக்கிறது. ஐசியூவில்தான் இருக்கிறார். எனினும் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இப்போதைக்கு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அவராகவே இயற்கையாக சுவாசித்தால் அவரது உடல் நலம் பெற்று விடும். இதற்குத்தான் மருத்துவர்கள் போராடி வருகிறார்கள் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. விஜயகாந்த் பூரண நலம் பெற பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Post

எனக்கு கர்வம் வராமல் வேற எவனுக்குடா வரும்…ஆவேசமாக பேசிய இளையராஜா

Posted by - February 2, 2025 0
யாரும் செய்யாத சாதனைகளை எல்லாம் செய்துகொண்டிருக்கும் எனக்கு கர்வம் இல்லையென்றால் வேறு யாருக்கு வரனும் என்று இளையராஜா கேள்வி எழுப்பியுள்ளார் இளையராஜ உலகளவில் இசைத்துறையின் மாபெரும் ஆளுமையாக…

வேலூர்: ஒரு குடும்பத்துக்கே கொலை மிரட்டல்?! – திமுக ஒன்றியச் செயலாளர் மீது நில அபகரிப்புப் புகார்

Posted by - December 2, 2022 0
கொலை மிரட்டல் விடுத்து, நிலத்தை அபகரிக்க முயல்வதாக தி.மு.க ஒன்றியச் செயலாளர் மீது ஒரு குடும்பத்தினர் புகார் அளித்திருப்பது, வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. லூர் மாவட்டம், அணைக்கட்டு…

வெறும் வயிற்றில் தக்காளி சாறு அருந்துவதால் உங்க உடலில் நடக்கும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா?

Posted by - December 4, 2023 0
ஒவ்வொரு நாளுமே நமக்கு முக்கியமான நாள்தான். அதனால், தினமும் உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க நீங்கள் சாப்பிடும் உணவோடு ஆரோக்கியமான ஒரு மாற்றத்தை வழக்கமாக வேண்டும். ஏனெனில், நீங்கள்…

சர்க்கரை நோயாளிகள் பிஸ்தா சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா அவங்க உடலில் என்ன நடக்குமாம் தெரியுமா?

Posted by - December 26, 2023 0
பிஸ்தா மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான நட்ஸ் வகைகளில் ஒன்றாகும். கூடுதலாக, எந்தவொரு ஆரோக்கியமான உணவுக்கும் இது ஒரு நல்ல கூடுதலாக இருக்கும். உங்கள் இரத்தத்தில் உள்ள…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம்- 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Posted by - November 23, 2022 0
பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளிடம் தவறாக நடந்த பள்ளி நிர்வாகி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *