மாதம் ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றும் சூரிய பகவான் வரும் பிப்ரவரி மாதம் கும்ப ராசிக்கு செல்கிறார். சனிபகவானுக்கு சொந்தமான ராசியாக கும்ப ராசி உள்ளது. சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகளுக்கு ராஜயோகத்தை ஏற்படுத்துகிறார். அந்த ராசிகள் யார் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்கள் குறித்து எழுதப்பட்டுள்ளன. இந்த ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் 12 ராசிகளுள் ஏதேனும் ஒரு ராசிக்கு இடம் பெயர்கின்றன. இவ்வாறு இடம்பெயரும் போது குறிப்பிட்ட ராசிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
மாதம் ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றும் சூரிய பகவான் வரும் பிப்ரவரி மாதம் கும்ப ராசிக்கு செல்கிறார். சனிபகவானுக்கு சொந்தமான ராசியாக கும்ப ராசி உள்ளது. சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகளுக்கு ராஜயோகத்தை ஏற்படுத்துகிறார். அந்த ராசிகள் யார் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
மேஷம்: சூரிய பகவானின் இந்த இடப்பெயர்ச்சியானது மேஷ ராசியினரின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. இதன் மூலம் மேஷ ராசியினரின் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். அவர்கள் எடுத்து செய்யும் அனைத்து வேலைகளும் வெற்றிக்கரமாக முடிவடையும். முதலீடுகளில் இருந்து லாபம் வர தொடங்கும். பணியிடத்தில் பதவி உயர்வுடம் ஊதிய உயர்வும் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமண யோகம் கைகூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வேலை கிடைக்கும்.
சிம்மம்: சூரிய பகவானால் ஆளப்படும் சிம்ம ராசியினருக்கு இந்த இடப்பெயர்ச்சியால் பெரும் ஆதாயங்கள் காத்து கொண்டிருக்கின்றன. வருமானத்திற்கான ஆதாயங்கள் அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக அமையும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
தனுசு: சூரிய பகவானின் இடப்பெயர்ச்சி தனுசு ராசியினர் பல சிறப்பான பலன்களை அடைய போகின்றனர். நிதி வருவாய்க்கான புதிய ஆதாயங்கள் தேடி வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். திருமண யோகம் கைகூடி வரும். ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும்.