தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்

185 0

சென்னை:

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் | DMDK leader Vijayakanth passes away

மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜயகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலமானார் என்று மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துணை ஆணையர் தீபக் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை முன்பு தொண்டர்கள் மிகுந்த சோகத்துடன் காத்திருக்கின்றனர்.

Related Post

தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கம் – விஜயின் ஓராண்டு அரசியல் பயணம் – தமிழக அரசியலில் தாக்கம்?

Posted by - February 2, 2025 0
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாமாண்டு தொடக்கநாளை ஒட்டி, அக்கட்சி தலைவர் விஜய் இன்று பல்வேறு தலைவர்களின் சிலையை திறந்து வைக்க உள்ளார். தலைவர்கள் சிலையை திறக்கும் விஜய்:…

ரூ.1000 வந்துருக்கா.. வங்கி அக்கவுண்ட் பேலன்ஸ் செக் பண்ண எளிய வழி.!

Posted by - September 15, 2023 0
மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிரகாரிக்கப்பட்டால் மேல் முறையீடு செய்வதற்கு அரசு வழிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1 கோடியே 6…

இப்போ எங்க போனாரு நடிகர் சூர்யா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளாசல்!

Posted by - December 31, 2024 0
தமிழக மக்களுக்காக நடைபெற்ற அதிமுக ஆட்சியை மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று ஜீபூம்பா செய்து ஆட்சியை பிடித்து விட்டார். சிறைச்சாலை அதிமுகவினருக்காக கட்டப்பட்டது. நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை,…

2023: ரத்னவேலு முதல் ஜாக்கி பாண்டியன் வரை – நடிப்பால் வசீகரித்த வில்லத்தனங்கள்!

Posted by - December 27, 2023 0
எல்லா கதைகளும் பிரச்சினைகளாலும் அதனை உருவாக்கும் எதிர்மறை கதாபாத்திரங்களாலும் மட்டுமே சுவாரஸ்யம் பெறுகின்றன. ‘ஹீரோ’வை ஹீரோவாக்குவதே பலமான வில்லன் கதாபாத்திரம்தான். அவர்களின் அழுத்தமான நடிப்பு பிரச்சினையின் தீவிரத்தை…

“நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது” புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!

Posted by - January 22, 2025 0
‘இரும்பின் தொன்மை’ எனும் நூல் வெளியிட்டு விழாவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். என்னவாக இருக்கும் என மக்கள் மத்தியில் பெரும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *