பெயரை கேட்டாலே எச்சில் ஊறுது: ஆந்திராவில் வினோத ஊறுகாய் கிராமம்

206 0

திருப்பதி:

ஊறுகாய் என்ற வார்த்தையை கேட்கும் போதே நம் வாயில் எச்சில் ஊற தொடங்குகிறது. தென்னிந்திய உணவைப் பொறுத்தவரை காரசாரமான ஊறுகாய் இல்லாமல் நிறைவடைவதில்லை. ஊறுகாய் தயாரிப்பு குடிசைத் தொழிலாக பல இடங்களில் செய்யப்படுகிறது.

ஆனால் ஒரு கிராமம் முழுவதும் 70 ஆண்டுகளுக்கு மேலாக ஊறுகாய் மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அந்த கிராமத்தை ஊறுகாய் கிராமம் என்று அழைக்கின்றனர். ஆந்திரமாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள உசுலுமறு கிராமம். இங்கு பாரம்பரிய தொழிலாக ஊறுகாய் தயாரிப்பு நடந்து வருகிறது. இந்த கிராமத்திற்குள் நுழையும்போதே ஊறுகாய் வாசனை துளைக்கிறது.

பெயரை கேட்டாலே எச்சில் ஊறுது: ஆந்திராவில் வினோத ஊறுகாய் கிராமம் | A strange  pickle village in Andhra Pradesh that makes you salivate just hearing the  name

அந்த அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் ஊறுகாய் தயாரிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. மாங்காய் ஊறுகாய் எலுமிச்சை இஞ்சி, புளி, பச்சை மிளகாய் மற்றும் நெல்லிக்காய் என ஒவ்வொருவரும் தனித்தனியாக ஊறுகாய்களை தயார் செய்து வருகின்றனர். இங்குள்ள சில ஆண்களின் பெயருக்கு அடைமொழியாக ஊறுகாய் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. கோதாவரி ஆற்றின் துணை நதியான வசிஷ்டா கரையில் இந்த கிராமம் அமைந்துள்ளதால் அங்கு ஊறுகாய்க்கு தேவையான அனைத்து மாங்காய் எலுமிச்சை போன்றவை கிடைக்கின்றன. இதே போல கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அங்கம்பாலம் மற்றும் நற்கடிபள்ளி ஆகிய கிராமங்களில் வீட்டுக்கு வீடு ஊறுகாய் தயாரிப்பு நடந்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக பிளாஸ்டிக் பைகளிலும், ஆந்திராவுக்கு வெளியேயும் பிற நாடுகளுக்கு மண் ஜாடிகளிலும் ஊறு காய்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த குடிசைத் தொழில் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாயை அளிக்கிறது. இதனை 70 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருவதாக அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.

Related Post

ஏர்டெல் ரூல்ஸ்.. இனிமே ரூ.20 இல்லனா.. SIM கார்டு டீஆக்டிவ்.. 90 நாட்களுக்கு குறி.. கால்கள், எஸ்எம்எஸ், டேட்டா!

Posted by - February 8, 2025 0
ஏர்டெல் (Airtel) கஸ்டமர்கள் அவர்களது சிம் கார்டு மூலம் 90 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை பயன்படுத்தவில்லை என்றால், உங்களது சிம் கார்டு டீஆக்டிவேட்…

கேரள குண்டுவெடிப்பு: போலீசில் சரணடைவதற்கு முன்பு பேஸ்புக் லைவில் பேசிய மார்டின்- வைரலாகும் பரபரப்பு வீடியோ

Posted by - October 30, 2023 0
கேரளாவின் களமசேரியில் ஜெஹோவா’ஸ் விட்னெசஸ் சபையின் மத வழிபாட்டு கூட்டத்தில் இன்று காலை 9 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில்…

பிஎம் கிசான்: விவசாயிகளுக்கு மோடி இன்று சர்ப்ரைஸ்? பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா ரூ.2000

Posted by - February 24, 2025 0
டெல்லி: பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 19வது தவணையாக சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார்.. 18வது…

என்னுடைய 90 விநாடி பேச்சுக்கே காங்கிரஸ் பீதியாகி உள்ளது – பிரதமர் மோடி

Posted by - April 24, 2024 0
தனது 90 விநாடி பேச்சு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும்…

வெயில் நேரத்தில் வெளியே செல்லும் முன் இதையெல்லாம் கவனிக்க தவறாதீங்க..!

Posted by - April 5, 2023 0
கொளுத்தும் வெயிலில் கால் நன்கு தெரியும் படியான காலணிகளை தவிர்ப்பது நல்லது. வெயில் சூடு படாமல் பாதங்களை பராமரிப்பதும் அவசியம். எனவே ஷூ, செப்பல் அணிவது சௌகரியமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *