விக்ரமன்
பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் விக்ரமன். அவர் சின்னத்திரையில் பணியாற்றி இருந்தாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒரு பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அவரது கட்சியினர் அவருக்கு ஆதரவு அளித்தார்கள். ஆனால் பைனலில் அஸீம் விக்ரமனை தோற்கடித்து டைட்டில் ஜெயித்தார்.
இந்நிலையில் தற்போது கிருபா முனுசாமி என்று பெண் விக்ரமன் மீது பல அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை வைத்து இருக்கிறார். தன்னை காதலித்து விக்ரமன் ஏமாற்றிவிட்டதாக இருவரும் வாட்சப்பில் பேசிய ஆதாரங்களை வெளியிட்டு இருக்கிறார்.
மேனேஜர் பெண்ணுடன் உறவு
விக்ரமன் தன்னுடன் காதலில் இருந்த நேரத்தில் தனது மேனேஜர் என கூறிக்கொண்டு இன்னொரு பெண்ணுடன் உறவில் இருந்தாராம். அதை அவரே என்னிடம் ஒப்புக்கொண்டார். 1.5 வருடமாக இப்படி ஏமாற்றி இருக்கிறார். இதற்கு முன்பு 15 பேரை விக்ரமன் இப்படி காதல் என்கிற பெயரில் ஏமாற்றி இருக்கிறார்.
“அவரை பற்றி கட்சியில் புகார் அளித்தேன், இது பற்றி விசாரணை நடந்த குழு அமைத்தார்கள். என் தரப்பில் உண்மை இருப்பதை குழுவும் ஒப்புக்கொண்டிருக்கிறது.” கட்சியின் தலைவர் மீது கூட விக்ரமன் மரியாதையுடன் பேசியது இல்லையாம். தலைவர் பற்றி மோசமாக விக்ரமன் தாக்கி பேசி இருக்கும் வாட்சப் உரையாடல்களையும் கிருபா முனுசாமி வெளியிட்டு இருக்கிறார்.