கஞ்சா பொட்டலத்துடன் முதலமைச்சரிடம் மனு கொடுக்க பாஜக நிர்வாகி ஒருவர் ஓடிவந்தார். உடனே அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி மற்றும் பேரக்குழந்தையுடன் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். இதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு மதுரைக்கு சென்றார். இந்த நிலையில் முதல்வரின் தனிப்பட்ட ஓய்வு பயணம் என்பதால் கட்சி நிர்வாகிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு மதுரை விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.
தொடர்ந்து, முதல்வர் மதுரை விமான நிலையம் வருகையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அப்போது கஞ்சா பொட்டலத்துடன் முதலமைச்சரிடம் மனு கொடுக்க பாஜக நிர்வாகி ஒருவர் ஓடிவந்தார். உடனே அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவரை பிடித்து அவனியாபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர், பாஜக ஓபிசி அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டியன் என்பது தெரியவந்துள்ளது.கஞ்சாவுடன் முதலமைச்சரிடம் மனு அளிக்க முற்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. அந்த மனுவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் போதை மற்றும் கஞ்சா பழக்கவழக்கங்கள் அதிகரித்துள்ளதாகவும், இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் வயது பேதமின்றி பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தை போதை பழக்க வழக்கத்தில் இருந்து காத்திட வேண்டுமென மனுவில் குறிப்பிட்டிருந்தார். பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் அவரை அவனியாபுரம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்ல முற்பட்ட முதல்வரை கஞ்சாவுடன் சந்திக்க வந்த நபரால் மதுரை விமான நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஏற்பட்டது.