ரூ.10 ஆயிரம் செலவு செய்தும் பயனில்லை: தண்ணீரின்றி கருகிய பயிர்களை டிராக்டரால் உழுது அழித்த விவசாயி

139 0

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த மணலி ஊராட்சியில் பரப்பாகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமமானது அரிச்சந்திரா ஆற்றில் இருந்து பிரியும் ராசன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறக்கூடிய கிராமமாகும். இந்நிலையில், இங்குள்ள விவசாயிகள் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற் கொண்டுள்ளனர். மேட்டூர் அணை கடந்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி திறக்கப்பட்டது. அதன் பின்னர் அரிச்சந்திரா ஆற்றில் ஒருமுறை தான் தண்ணீர் வந்தது. தொடர்ச்சியாக தண்ணீர் வராததால் ராசன் வாய்க்காலிலும் தண்ணீர் குறைந்தளவே இருந்தது.திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களை டிராக்டரில் உழுது  அழித்த விவசாயி | Farmer Plowed and Destroyed Paddy Fields that were  Scorched Without Water near ...

இந்நிலையில், நேரடி தெளிப்பு மூலம் பயிரிடப்பட்ட குறுவை நெற்பயிர்கள் முளைத்து தண்ணீரின்றி கருகத் தொடங்கின. இதனால் சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர். இந்நிலையில், செல்வம் என்கிற விவசாயி தனக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.10 ஆயிரம் செலவு செய்து குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ளார்.

தற்போது தண்ணீர் இல்லாததால் மேற்கொண்டு செலவு செய்தாலும் நெற்பயிர்கள் வளர்ந்து பலன் கொடுக்குமா என தெரியவில்லை என கருதி சாகுபடி செய்யப்பட்ட வயலில், டிராக்டரை கொண்டு உழவு செய்து முளைத்து தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களை அழித்தார். எனவே, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Post

ஒரே சாய்ஸ் அதிமுக கூட்டணி தான்…தவெக நிர்வாகிகளிடம் விஜய் புலம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.?

Posted by - April 26, 2025 0
அதிமுகவிடம் ஓவராக டிமாண்ட் செய்து, கூட்டணியை கோட்டைவிட்டு விட்டதாக தவெக நிர்வாகிகளிடம் விஜய் புலம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் யார் என்று தெரியுமா.? உங்க பேச்சை எல்லாம்…

`திருட்டுப்போன பைக்கை ஓட்டி வந்த போலீஸ்’ – தஞ்சாவூர் டி.ஐ.ஜி-யிடம் புகார் அளித்த விவசாயி

Posted by - December 2, 2022 0
“திருட்டுப்போன பைக்கை வாய்மேடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸ் ஒருவர் பயன்படுத்திவருவது தெரியவந்தது. போலீஸ் என்பதால் பயந்துபோன நான், பைக் குறித்து எதுவும் கேட்கவில்லை.” ஒரு வருடத்துக்கு…

இந்த விழாவுக்கு அசுரன் பட டயலாக் முக்கிய காரணம் – மேடையில் விஜய் அதிரடி

Posted by - June 17, 2023 0
மாணவர்களை சந்திக்கும் நிகழ்வில் நடிகர் விஜய் தனுஷின் அசுரன் பட வசனத்தை மேற்கோள்காட்டினார். தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று…

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு: தாம்பரம் 2-வது இடம் பிடித்தது

Posted by - August 14, 2023 0
திருச்சி: தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது முதலமைச்சர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சிறந்த 2 மாநகராட்சிக்கு தலா…

கார்த்திகை தீபத்திருவிழா மகா தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்

Posted by - December 3, 2022 0
ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். திருவண்ணாமலை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *