சென்னை:
சர்க்கரை நோயாளிகள் இனிப்பு நிறைந்த பேரீச்சம் பழம் சாப்பிடலாமா? இந்த பழத்தை சாப்பிட்டால் என்னாகும்?
தித்திப்பு நிறைந்த பழம் என்பதால், நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம் பழம் சாப்பிடலாமா? என்ற சந்தேகமும் தொடர்ந்து நிலவி வருகிறது.. சமீபத்தில், “நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷன்” ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.. அதன்படி, பேரிச்சம்பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதை கூறி ஆச்சரியத்தை கிளப்பியிருந்தது
ஆய்வுகள்:
வெறும், 100 கிராம் பேரீச்சம்பழத்தில் 311 கலோரிகள், 9 கிராம் நார்ச்சத்து, 1 முதல் 3 கிராம் புரதம் மற்றும் செலினியம், மெக்னீசியம், தாமிரம், பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, பாஸ்பேட் ஆகிய நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதாம்.. உலர்ந்த அடர் பழுப்பு பேரிச்சம்பழங்கள் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது என்கிறது அந்த ஆய்வு.. காரணம், 100 கிராம் பேரீச்சம்பழத்திற்கு 4.70 மி.கி. இரும்புசத்து இருக்கிறதாம்..
எனவே, பேரீச்சம்பழங்களை முற்றிலும் தவிர்க்க தேவையில்லையாம்.. மிதமான அளவில் சாப்பிடலாம் என்கிறார்கள். கார்போஹைட்ரேட்டுகளும் வைட்டமின்களும் இதில், உள்ளன..
சர்க்கரை நோயாளி:
எனவே, இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழம்தான்.. இதில், கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளது.. கிளைசெமிக் குறியீடு 42.8 முதல் 74.6 வரை உள்ளதுடன், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் ரத்த சர்க்கரையை உடனே கூட்டாது என்கிறார்கள்.
பொதுவாக, அதாவது, 55க்கு கீழ் ஜிஐ அளவிருக்கும் உணவுகள், ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்க செய்யாது.. எனவே, இந்த பேரீச்சம் பழத்தின் ஜிஐ எண் 42 ஆகும்.. அதனால், இந்த பழத்திலிருந்து கிடைக்கும் சர்க்கரை சத்துக்கள், மெதுவாகவே ரத்தத்தில் கலக்க செய்கிறதே தவிர, திடீர்னு ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யாது. தேவைப்பட்டால், மற்ற நட்ஸ்களுடன் சேர்த்து இந்த பழத்தை எடுத்து கொள்ளலாம்.
சர்க்கரை நோயாளிகள்:
இந்த பழத்தில் இன்னொரு பிளஸ் பாயிண்டும் உள்ளது.. டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் மக்னீஷியம் அளவு குறைவாக இருக்கும் என்பார்கள். இதுபோன்றவர்களுக்கு பேரீச்சை உதவுகிறது. காரணம், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க பேரீச்சையில் உள்ள மக்னீஷியம் உதவுகிறது.
ஆனால், இதில் கலோரிகளும் மிக அதிகமாக உள்ளன.. அதாவது 100 கிராம் பேரிச்சம் பழத்தில் 314 கலோரிகள் இருக்கிறதாம். எனவே, சர்க்கரை நோயாளிகள் ஒன்றிரண்டு பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும். அதுவும் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.