பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

186 0

சென்னை:

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்காக அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதன்பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு கூடி சசிகலா, தினகரன் ஆகியோரை அப்பதவிகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கியது.

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து என்னை நீக்கியது செல்லாது – சசிகலா |  Dinasuvadu

அதற்கு பதில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தநிலையில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் தன்னை நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நிராகரிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். மனுவை ஏற்றுக்கொண்ட உரிமையியல் நீதிமன்றம், சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சசிகலா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று அதிரடி தீர்ப்பை வழங்கினர். உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்த சசிகலாவின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Post

ஒரே மாசத்துல உங்க உடல் எடையை குறைக்கணுமா? அப்ப இந்த 5 விஷயத்தை டெய்லி ஃபாலோ பண்ணுங்க..!

Posted by - November 29, 2023 0
உடல் எடையை குறைப்பது என்பது மிகவும் சவாலான பணி. யாராலும் எளிதாக உடல் எடையை குறைத்து விட முடியாது. உடல் எடையை குறைப்பதற்கு சீரான உணவுகள், உடற்பயிற்சி…

மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு

Posted by - February 18, 2025 0
தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். மார்ச் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் தாக்கல்…

”யார் சொத்து, தூக்கிருவேன்” மேடையில் மகன் அன்புமணியை எச்சரித்த ராமதாஸ்? விசிக மீது அட்டாக்?

Posted by - May 12, 2025 0
வன்னிய இளைஞர் மாநாட்டில் பாமக நிறுவனம் ராமதாஸ், மகன் அன்புமணியை மறைமுகமாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. Anbumani Ramadoss: பாட்டாளி மக்கள் கட்சி தனிப்பட்டவர்களின் சொத்து அல்ல என, அதன்…

ஐந்து உறுதிமொழிகள்.. தவெக கட்சியினருக்கு விஜய் அறிவுறுத்தல்

Posted by - February 19, 2024 0
தமிழக வெற்றி கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்ற நிலையில், நடிகர் விஜய் கட்சியினருக்கான ஐந்து உறுதிமொழிகளை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் விஜய் கடந்த…

சென்னையில் 4 லட்சம் பேருக்கு உணவு வினியோகம் தொடருகிறது: மாநகராட்சி ஆணையர் தகவல்

Posted by - December 7, 2023 0
சென்னை: சென்னையில் பெய்த கனமழை பாதிப்பில் 4-வது நாளாக இன்னும் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவுகள் வினியோகிக்கும் பணி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *