“பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றி” – ஈரோடு இடைத்தேர்தல்.. த.வெ.க வெளியிட்ட அறிவிப்பு!

69 0

திமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வி.சி.சந்திரகுமார் இன்று நண்பகல் 12 மணியளவில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார். அதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி காலை 11 மணியளவில் வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் கட்சி போட்டியிடுவது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைந்ததை அடுத்து அத்தொகுதிக்கு பிப்ரவரி 25ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக மற்றும் பாஜக அறிவித்துள்ள நிலையில், திமுகவும், நாம் தமிழர் கட்சியும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். கடந்த 10ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியதை அடுத்து இதுவரை தேர்தலில் போட்டியிட 9 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.திமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வி.சி.சந்திரகுமார் இன்று நண்பகல் 12 மணியளவில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார். அதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி காலை 11 மணியளவில் வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளார்.

இதையடுத்து வரும் 18ஆம் தேதி வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலரான மணீஷ் பரிசீலனை செய்யவுள்ளார். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 25ஆம் தேதி பதிவாகும் வாக்குகள், பிப்ரவரி 28ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி போட்டியிடவில்லை என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு என்றும், அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.மேலும் தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றாமல் தங்களின் அதிகார பலத்துடன் பொதுத் தேர்தல்களைக் காட்டிலும், ஜனநாயகத்திற்கு எதிராகப் பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.அதனடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதையும் விஜயின் உத்தரவின்பேரில் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.ஏற்கனவே, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துள்ள நிலையில் தற்போது த.வெ.க.வும் போட்டியில்லை என்று அறிவித்துள்ளது.

Related Post

பாத்துட்டே இருங்க எல்லோருக்கும் வேட்டு வைக்கப் போகிறேன் – நடிகர் மன்சூர் அலிகான் அதிரடி..!

Posted by - March 26, 2024 0
எதிர்வரும் மக்களவை தேர்தலில் வேலூர் மக்களவை தொகுதியில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதற்காக தனது வேட்புமனுவை…

விஜய்க்காக களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா! ஜான் ஆரோக்கியசாமிக்கு அல்வா! ஜனநாயகனின் புது ஸ்கெட்ச்

Posted by - January 30, 2025 0
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமிக்கு பதிலாக ஆதவ் அர்ஜுனா பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு…!

Posted by - May 26, 2023 0
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை…

மாலை 5.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர்.. முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!!

Posted by - March 11, 2024 0
நாட்டு மக்களுக்கு என்ன சொல்லப்போகிறார் பிரதமர் மோடி என்று எதிர்பார்ப்பு இன்று மாலை 5.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்த உள்ளார்.…

எதிர்பாராததை எதிர்பாருங்கள் – பாஜக வேட்பாளராக களமிறங்கும் நடிகை கங்கனா..!!

Posted by - March 26, 2024 0
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா போட்டியிடவுள்ளார். இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *